News November 23, 2024
வரலாற்றில் இன்று

1910 – சுவீடனில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1956 – அரியலூரில் நடந்த ரயில் விபத்தில் 142 பயணிகள் உயிரிழந்தனர்,
1980 – இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 4,800 பேர் உயிரிழந்தனர்.
2007 – அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
2003 – திமுக மூத்த தலைவர் முரசொலி மாறன் மறைந்தார்.
Similar News
News November 20, 2025
படத்தின் பெயரை கட்சிக்கு வைத்தாரா மல்லை சத்யா?

தான் தொடங்கியுள்ள புதிய கட்சிக்கு ’திராவிட வெற்றிக் கழகம்’ என பெயர் வைத்துள்ளார் மல்லை சத்யா. இந்த பெயரை எங்கோ கேட்டதுபோல இருக்கிறதே என சற்று ரீவைண்ட் செய்து பார்த்தபோது ஒன்று புலப்பட்டது. சமீபத்தில் பிக்பாஸ் அபிராமி ‘திராவிட வெற்றிக் கழகம்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். கொடியை டிகோட் செய்த நெட்டிசன்கள், ‘இதையா 15 நாள்களாக குழு அமைத்து முடிவு செய்தார்’ என கமெண்ட் அடிக்கின்றனர்.
News November 20, 2025
கொளுத்தி போட்ட சசி தரூர்.. காங்கிரஸில் சலசலப்பு

PM மோடியின் பொருளாதார, கலாச்சார சிந்தனைகளை காங்கிரஸ் MP சசிதரூர் சமீபத்தில் பாராட்டி இருந்தார். இது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் சார்ந்த கட்சியின் கொள்கைகளை விட, இன்னொரு கட்சியின் கொள்கைகள் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுகிறது என நினைத்தால், அவர் ஏன் பாஜகவில் சேரக்கூடாது என காங்கிரஸ் MP சந்தீப் தீக்ஷித் கேள்வியெழுப்பியுள்ளார்.
News November 20, 2025
ALERT: 5 நாள்களுக்கு இங்கெல்லாம் கனமழை

தென் தமிழகம் மற்றும் காவிரி படுகையில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை தொடரும் என IMD தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை தொடர்கிறது. நாளை(நவ.21) நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. குடையை ரெடியா வையுங்கள் மக்களே..!


