News June 17, 2024
திமுக ஆட்சியில் இப்படி தான் நடக்கும்: இபிஎஸ்

தமிழகத்தில் மணல் கடத்தல் அதிகரித்துள்ளதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். 2 நாள்களுக்கு முன் புதுக்கோட்டையில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற கோட்டாட்சியரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி நடந்துள்ளதாக கூறிய அவர், திமுக ஆட்சியில் மணல் கடத்தலை தடுப்பவர்கள் மீதான தாக்குதல் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. ஆனால், தாக்குதல் சம்பவங்களை மக்கள் வெளிச்சத்திற்கு வராதபடி தடுப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது என விமர்சித்தார்.
Similar News
News April 6, 2026
BREAKING: நடிகை சுபாஷினி தற்கொலை

சென்னை, ஐயப்பன்தாங்கலில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நடிகை சுபாஷினி(36) தற்கொலை செய்துகொண்டார். பிரபலமான ‘கயல்’ சீரியல் மற்றும் சில படங்களில் நடித்து வரும் இவர் இலங்கையை சேர்ந்தவராவார். கணவருடன் பெங்களூருவில் வசித்து வரும் இவர், போரூரில் ஷூட்டிங்கில் பங்கேற்க வந்தபோது இந்த முடிவை எடுத்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. #RIP
News April 6, 2026
ஈரான் மீது USA அணுகுண்டு வீசினால் என்ன ஆகும்?

ஒருவேளை ஈரான் மீது USA அணுகுண்டு வீசினால், வீசிய 10 வினாடியில் அந்நாடே தரைமட்டமாகிவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதன் தாக்கம் 50 கி.மீ வரை பரவி, மக்கள் தீயில் கருகிவிடுவார்கள். சுமார் 50 லட்சம் டன் கரியமில வாயு புகை விண்ணில் எழுந்து சூரிய ஒளியை தடுக்கும். இதனால் புவி வெப்பம் குறைந்து, அமில மழை பொழியலாம். விவசாயம் அழிந்து, துருக்கி, PAK என அருகிலுள்ள நாடுகள் பஞ்சத்தில் வாடும். #போர்_வேண்டாம்
News April 6, 2026
இந்திய பங்குகளில் முதலீடு செய்துள்ள Top 10 நாடுகள்

இந்தியாவின் நிலையான வளர்ச்சி காரணமாக உலகளவில் அந்நிய முதலீட்டிற்கு விருப்பமான இடமாக இந்தியா திகழ்கிறது. இதனால், இந்தியாவின் உள்கட்டமைப்பு, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் நீண்ட கால மூலதனத்தை இது கொண்டு வருகிறது. இது நாட்டின் GDP-ஐயும் அதிகரிக்கிறது. அதன்படி, 2025-ல் இந்திய பங்கு சந்தையில் எந்த நாடு எவ்வளவு முதலீடு செய்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE செய்யுங்கள். SHARE.


