News August 5, 2024

ஒடிஷாவில் பனைமரம் அதிகம் வளர்ப்பதன் காரணம் இதுதான்!

image

மின்னல் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் மாநிலம் முழுவதும் அதிக அளவிலான பனை மரங்களை வளர்க்க ஒடிஷா அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 19 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. மற்ற மரங்களை விடவும் பனை மரங்கள் உயரமாக இருப்பதால் அவை மின்னலை எளிதில் தடுக்கும் தன்மை கொண்டது என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒடிஷாவில் கடந்த 11 ஆண்டுகளில் மின்னல் தாக்கி 3,790 பேர் உயிரிழந்துள்ளனர்.

Similar News

News January 18, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News January 18, 2026

அண்ணன் படம் வராததால் தம்பி படம்: ஜீவா

image

‘ஜன நாயகன்’ சென்சார் பிரச்னை காரணமாக வெளிவராததால், கார்த்தி, ஜீவா ஆகியோரின் படங்கள் வெளியாகியுள்ளன. பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஜீவா, அண்ணன் படம் வராததால் தம்பி படம் வந்துள்ளதாக கலகலப்பாக பேசினார். மேலும், படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவித்தார்.

News January 18, 2026

திமுக திட்டங்களை பாராட்டிய EPS: அமைச்சர் ரகுபதி

image

திமுக வெற்றிகரமாக நிறைவேற்றிய திட்டங்களையே ‘காப்பி பேஸ்ட்’ <<18879251>>வாக்குறுதியாக <<>>EPS அறிவித்துள்ளதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். திமுகவின் திட்டங்களையே அதிமுக வாக்குறுதிகளாக அறிவித்திருப்பது மீண்டும் திமுக வெற்றிபெற்று ஆட்சியைத் தொடரும் என்பதைக் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். திமுக அரசின் சாதனைத் திட்டங்களை முதன்முறையாக EPS மறைமுகமாகப் பாராட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!