News March 19, 2024

உலகின் மிகவும் நீளமான தோசை இதுதான்!

image

பெங்களூருவில் 75 சமையல் கலைஞர்கள் இணைந்து உலகின் மிகவும் நீளமான தோசையை உருவாக்கி, கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். MTR ஃபுட்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு. 123.03 அடி நீளம் கொண்ட தோசையை உருவாக்கினர். 110 முறை தோல்வியை தழுவிய சமையல் கலைஞர்கள் பல்வேறு திட்டமிடலுக்கு பின்னர் இதனை சாதித்துள்ளனர். இதற்கு முன்னர், 54 அடி நீளமான தோசையே, உலகின் நீளமான தோசையாக சாதனை பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

Similar News

News April 10, 2026

BREAKING மதுரை: நடுத்தர மக்கள், வணிகர்கள் அதிர்ச்சி

image

மதுரை மாநகராட்சியில் குடிநீர் வரி மற்றும் இதர நீர் பயன்பாட்டு கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஆண்டுக்கு ரூ.900 மாக இருந்த குடிநீர் கட்டணம் தற்போது ரூ. 6,480 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குடிநீர் வரி பல மடங்கு உயர்த்தப்பட்டதால் நடுத்தர மக்கள், சிறு வணிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News April 10, 2026

பிஹாரின் அடுத்த முதல்வர் யார்?

image

தேசிய அரசியலுக்குள் <<19614648>>நிதிஷ் <<>>நுழைந்துவிட்டதால், பிஹாரின் அடுத்த முதல்வர் யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, பாஜக மூத்த தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். தற்போது முதல்வர் ரேஸில் பாஜகவின் சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா இடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. டெல்லி தலைமையின் ஆதரவு உள்ளதால் சாம்ராட் சௌத்ரிக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக பேசப்படுகிறது.

News April 10, 2026

மகளிர் உரிமைத் தொகை.. NEW UPDATE

image

மாநில அளவிலான அனைத்து நலத் திட்டங்களுக்கும் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் பென்சன் உள்ளிட்ட பயனாளிகளின் தரவுகள் சரிபார்க்கப்படும். மகளிர் உரிமைத் தொகை பெற்று வருபவர்கள் வேறு திட்டத்தில் பயனாளிகளாக இருந்தால், அவர்களுக்கு உரிமைத் தொகை நிறுத்தப்படும். அரசின் திட்டங்கள் சரியான பயனாளிகளை சென்றடைவதே இதன் நோக்கம்.

error: Content is protected !!