News March 19, 2024
உலகின் மிகவும் நீளமான தோசை இதுதான்!

பெங்களூருவில் 75 சமையல் கலைஞர்கள் இணைந்து உலகின் மிகவும் நீளமான தோசையை உருவாக்கி, கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். MTR ஃபுட்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு. 123.03 அடி நீளம் கொண்ட தோசையை உருவாக்கினர். 110 முறை தோல்வியை தழுவிய சமையல் கலைஞர்கள் பல்வேறு திட்டமிடலுக்கு பின்னர் இதனை சாதித்துள்ளனர். இதற்கு முன்னர், 54 அடி நீளமான தோசையே, உலகின் நீளமான தோசையாக சாதனை பட்டியலில் இடம்பெற்றிருந்தது.
Similar News
News December 7, 2025
அரியலூர் படைவீரர் கொடிநாள் வசூல்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், படைவீரர் கொடிநாள் வசூல் பணியினை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி, கொடிநாள் வசூல் உண்டியலில் நிதி அளித்து, இன்று துவக்கி வைத்தார். மேலும் கொடிநாள் நிதி வசூலில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கைவிட கூடுதலாக வசூலித்து, சாதனை படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு தெரிவித்தார்.
News December 7, 2025
நடுக்கடலில் படகு கவிழ்ந்து 18 பேர் பலி!

கிரேக்கத்தின் கிரீட் தீவு அருகே, புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலியாகினர். 2 பேர் மீட்கப்பட்ட நிலையில், பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆப்பிரிக்கா, ஆசியாவில் இருந்து மோதல்கள் மற்றும் வறுமை காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய பயன்படுத்தப்படும் முக்கிய நுழைவாயிலாக கிரீஸ் உள்ளது. இந்நிலையில், இந்த படகு எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
News December 7, 2025
அறிவாலயம் சுடுகாடு மாதிரி: நாஞ்சில் சம்பத்

திமுகவை விட தவெகவின் தேர்தல் பணிகள் சிறப்பாக இருப்பதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். மேலும், தவெக அலுவலகம் பிரமாதமாக உள்ளதாக கூறிய அவர், ஆனால், அறிவாலயம் சுடுகாடு மாதிரி இருக்கும் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மேலும், தவெக அலுவலகத்தில் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் லேப்டாப் வைத்து தேர்தலுக்கான பணியை செய்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


