News May 1, 2024
சட்டையை போல் கூட்டணியை மாற்றுகிறார்கள்

காங்கிரஸ் கூட்டணி குழப்பங்களின் மொத்த உருவமாக இருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். ஊழல் கட்சிகள் சட்டையை மாற்றுவது போல் தங்கள் கொள்கைகளையும் கூட்டணிகளையும் மாற்றிக்கொள்வதாக குற்றம் சாட்டிய அவர், அதன் ஒரு வெளிப்பாடாகவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி இன்றைக்கு INDIA கூட்டணியாக மாறி இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் எப்போதும் தெளிவான முடிவை எடுக்காது என்றார்.
Similar News
News August 25, 2025
இதுவரை இல்லாத உச்சம்.. ₹5000 உயர்வு

வெள்ளி விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 20-ம் தேதி வெள்ளி விலை கிராமுக்கு ₹125-க்கும், கிலோ வெள்ளி ₹1,25,000-க்கும் விற்பனையானது. ஆனால், கடந்த 5 நாள்களில் மட்டும் கிராமுக்கு ₹5, கிலோவுக்கு ₹5000 உயர்ந்துள்ளது. வெள்ளி நகைகளையும் இனி வங்கிகளில் அடகு வைக்கலாம் என RBI பரிந்துரை அளித்துள்ளதால், வெள்ளி விலை அதிகரித்து வருகிறது.
News August 25, 2025
அதிமுக கூட்டணியை மாற்றுவது நல்லது: திருமா

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலக வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பாஜகவால் அதிமுகவுக்கு ஆபத்து என நாங்கள் சொன்னபோது விழுந்து புரண்டிய அக்கட்சியினர், தற்போது அதே கருத்தை விஜய் கூறும்போது அமைதியாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். அதிமுகவின் வாக்கு வங்கி சிதறாமல் இருக்க ஒரே வழி, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதுதான். இல்லையென்றால் அதிமுகவை காப்பாற்ற முடியாது என்றார்.
News August 25, 2025
IPL 2026-லும் தோனி வேண்டும்: வன்ஷ் பேடி

2026 IPL சீசனிலும் தோனி விளையாட வேண்டும் என்று தான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சென்னையும் விரும்புவதாக CSK வீரர் வன்ஷ் பேடி கூறியுள்ளார். சமீபத்திய பேட்டியில், அணிக்கு தோனி அளிக்கும் பங்களிப்பு & அவரது வழிநடத்தும் திறனை யாராலும் ஈடு செய்ய முடியாது என புகழ்ந்துள்ளார். கடந்த சீசனில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட CSK மீண்டு வர வேண்டும், தோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.