News March 31, 2025
எனது மகனை பலிகிடா ஆக்குகின்றனர்

L2 எம்புரான் பட கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதில், <<15942114>>மோகன்லாலுக்கு <<>>ஆதரவாக இயக்குநர் மேஜர் ரவி பதிவிட்டார். இதனால், பிருத்விராஜ் கடுமையாக விமர்சிக்கப்பட, அவரின் தாயார் பேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது மகனை பலிகிடா ஆக்க பார்க்கிறார்கள் என குற்றம் சாட்டி உள்ளார். ஒரு இயக்குனராக, பிருத்விராஜ் படத்தில் தொடர்புடைய யாரையும் ஏமாற்றவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News April 2, 2025
இந்த மாதம் 3 படங்கள் மட்டும் போதுமா?

வரும் 10ஆம் தேதி அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் வெளியாக உள்ளது. அதேபோல், வரும் 18ஆம் தேதி சிபிராஜ் நடித்துள்ள ‘டென் ஹவர்ஸ்’, 24ஆம் தேதி சுந்தர் சி, வடிவேலு நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ ரிலீசாக உள்ளது. இதை தவிர்த்து, பெரிதாக சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் இந்த மாதம் ரிலீசாகவில்லை. 2925-ன் முதல் 3 மாதங்களில் 65 படங்கள் வெளியான நிலையில், இந்த மாதம் 3 முக்கிய படங்கள் மட்டுமே ரிலீசாக உள்ளது.
News April 2, 2025
தோனி இல்லை என்றால் IPL-க்கு தான் இழப்பு: கெயில்

IPL-ல் தோனி விளையாடுவதன் மூலம் அதன் மதிப்பு பல மடங்கு உயர்வதாக கெயில் தெரிவித்துள்ளார். தலைசிறந்த வீரரான அவர் மீது தேவையில்லாத அழுத்தங்களை செலுத்த வேண்டாம் எனவும், அவர் 11ஆவது வீரராக களமிறங்கினாலும் தனக்கு கவலையில்லை எனவும் கெயில் கூறியுள்ளார். மேலும், தோனியின் கீப்பிங் திறன் அதே ஷார்ப்புடன் இருப்பதாகவும், தோனி விளையாடாவிட்டால் அது IPL-க்குத்தான் இழப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
News April 2, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 224 ▶குறள்: இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு. ▶பொருள்: ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.