News December 3, 2024
Phone வாங்க காசு இல்லை.. தாயை மிரட்டிய மகன்

ஆறாவது விரலான போன் படுத்தும் பாடு சொல்லி மாளாது. மஹாராஷ்டிரா, நாக்பூரில் தாய் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவரது 18 வயது மகன் போன் வாங்க ரூ.10 ஆயிரம் கேட்டுள்ளான். அதற்கு பணம் இல்லையென தாய் பதிலளிக்க, கோபத்தின் உச்சிக்கு சென்றவன், வாள் எடுத்துக் காட்டி தாயையும் சகோதரியையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளான். போன் நம்மை ஆட்டி வைக்கிறது பார்த்தீர்களா?
Similar News
News September 18, 2025
சிறுத்தை சிவா ரிட்டர்ன்ஸ்!

சிறுத்தை, வீரம், விஸ்வாசம் என வெற்றி படங்களை கொடுத்த சிறுத்தை சிவாவின் கரியர் ‘கங்குவா’ படத்துடன் முடிந்து விட்டதாகவே பலரும் பேசினர். ஆனால், அவர் மனம் தளராமல் Comeback கொடுக்க ரெடியாகி வருகிறார். அவர் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க, விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். ‘விஸ்வாசம்’ போன்ற மெகா ஹிட் படத்தை சிறுத்தை சிவா கொடுப்பாரா?
News September 18, 2025
இந்த ஊர்களுக்கு போங்க

பிரபலமான சுற்றுலா தளங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் பலரும் அமைதியான இடங்களை தேடி கண்டுபிடித்து கொண்டாடி வருகின்றனர். அதுமாதிரியான இயற்கையின் ரம்மியம் நிறைந்த சில இடங்களை உங்களுக்காக மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அந்த இயற்கை அழகில் தொலைந்துபோக ஸ்வைப் பண்ணுங்க. இதில் இல்லாத உங்களுக்கு தெரிந்த அருமையாக ஸ்பாட்டை கமெண்ட்ல சொல்லுங்க.
News September 18, 2025
வாக்கு திருட்டு தகவல்களை ராகுலுக்கு கொடுப்பது யார்?

வாக்கு திருட்டு தொடர்பான தரவுகளை திரட்ட தேர்தல் ஆணையத்திலிருந்தே உதவிபெற்று வருவதாக கூறியுள்ளார் ராகுல் காந்தி. வாக்கு திருட்டு குறித்து முதல்முறையாக குற்றம்சாட்டும் போது இந்த உதவி கிடைக்கவில்லை என தெரிவித்த அவர், இனி இந்த தகவல்கள் கிடைப்பதை யாராலும் தடுக்கமுடியாது என கூறியுள்ளார். இதனால் தேர்தல் ஆணையத்திலிருந்தே யார் இந்த தகவலை பரப்புவது என்ற குழப்பம் EC-ல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.