News October 1, 2025
படிப்புக்கும் நடிப்புக்கும் தொடர்பில்லை: அனுபமா

தான் படித்த பள்ளியில் படிப்பில் முதலிடம் பிடிப்பவர்களுக்கே நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என அனுபமா பரமேஸ்வரன் கூறியுள்ளார். ஆனால், தான் டாப்பர் இல்லை என்பதால், அப்போது நடிப்பை தள்ளிவைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் வளர்ந்த பிறகுதான் படிப்புக்கும் நடிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிய வந்ததாக தனது அனுபவத்தை சமீபத்திய பேட்டியில் அனுபமா பகிர்ந்துள்ளார்.
Similar News
News October 1, 2025
கதராடைகள் அணிந்திட CM ஸ்டாலின் வேண்டுகோள்

நாளை காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரை நினைவு கூர்ந்திடும் வகையில் அனைவரும் கதராடைகளை அணிய CM ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார். நெசவாளர்களின் வாழ்வை மேம்படுத்த மாணவர்கள், அரசு அலுவலர்கள் கதராடைகளை வாங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நெசவாளர்கள் வாழ்வில் ஒளியேற்றிட கதர் கிராம தொழில் வாரியம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
News October 1, 2025
இட்லி கடையில இட்லி எப்படி இருக்கு?

‘இட்லி கடை’ படத்தை வெளிமாநிலங்களில் பார்த்த ரசிகர்கள், பாசிட்டிவ் ரிவ்யூ கொடுத்து வருகின்றனர். வழக்கம் போல தனுஷ் சிறப்பாக நடித்திருக்கிறார், எமோஷனலாக திரைக்கதை அமைத்து அவர் இயக்குநராகவும் பாராட்டை பெற்று வருகிறார். அருண் விஜய், நித்யா மேனன் ஆகியோரும் நன்றாக நடித்திருக்கிறார்களாம். மேலும், GV பிரகாஷின் இசை & BGM-ஐ ரசிகர்கள் பாராட்டுகின்றனர். Stay tuned with Way2news for full review.
News October 1, 2025
இன்று முதல் அமலுக்கு வந்தது

*ஆன்லைன் கேமிங் தடை சட்டம் அமலுக்கு வந்தது.
*ஆதார் சேவை கட்டணங்கள் உயர்வு.
*HDFC, PNB உள்ளிட்ட வங்கிகளில் லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டும்.
*PhonePe, GPay, Paytm போன்ற செயலிகளில் Money Request கோர முடியாது.
*ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவுகள் திறந்த முதல் 15 நிமிடங்களுக்கு, ஆதாருடன் இணைக்கப்பட்ட பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். *வணிக <<17881244>>சிலிண்டர்<<>> விலை உயர்ந்தது.