News August 5, 2024
நெல்லை திமுகவில் சலசலப்பு..?

திருநெல்வேலி மாநகராட்சியில் இன்று நடைபெற்ற மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலில் திமுக போட்டி வேட்பாளர் பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்றுள்ளதால் நெல்லை மத்திய மாவட்ட திமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக தலைமை கூறியும் 23 பேர் திமுக வேட்பாளருக்கு ஆதரவு மறுத்துள்ளனர். வெறும் 7 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். இதனால் நெல்லை திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News January 15, 2026
பாளையங்கோட்டையில் கிரேனை பறிமுதல் செய்த போலீசார்

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நேற்று முந்தினம் ஒருவர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதி கலந்து கொண்ட சிலர் கிரன் கொண்டு ஆளுயர மாலையை அணிய வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கிரேன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கொண்டு வரப்பட்டதாக புகார் எழுந்தது. இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து அந்த கிரேனை பறிமுதல் செய்தனர்.
News January 15, 2026
நெல்லை: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

நெல்லை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <
News January 15, 2026
நெல்லை: துப்பாக்கி விற்பனையில் மேலும் 2 பேர் கைது

மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி சாலையை சேர்ந்த திமுக பிரமுகரான ரத்தினம் பாலா(40) துப்பாக்கி பதுக்கி விற்றதாக நேற்று கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அமீர் சுகைல், முசாம்பீர் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து திண்டுக்கல் விரைந்த போலீசார் சாகுல் ஹமீது, சிக்கந்தர் ஷேக் ஒலி ஆகியோரை கைது செய்தனர்.


