News August 5, 2024

நெல்லை திமுகவில் சலசலப்பு..?

image

திருநெல்வேலி மாநகராட்சியில் இன்று நடைபெற்ற மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலில் திமுக போட்டி வேட்பாளர் பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்றுள்ளதால் நெல்லை மத்திய மாவட்ட திமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக தலைமை கூறியும் 23 பேர் திமுக வேட்பாளருக்கு ஆதரவு மறுத்துள்ளனர். வெறும் 7 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். இதனால் நெல்லை திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News

News January 24, 2026

நெல்லை: வீடு புகுந்து பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்

image

பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டூர் பகுதியை சேர்ந்த முஸ்தபா மகன் கலீல் ரகுமான்(50). இவர் அதே பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை ஆபாசமான வார்த்தைகளால் பேசி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பெண் கொடுத்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ரகுமானை கைது செய்தனர்.

News January 24, 2026

நெல்லையப்பர் கோயில் உண்டியல் விவரம் அறிவிப்பு

image

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவிலில் இன்று நடைபெற்ற 22 நிரந்தர உண்டியல்கள் திறப்பில் ரூ.23,47,066 ரொக்கமும், 15 கிராம்.100 மி.கிராம் எடையுள்ள பல மாற்றுப் பொன் இனங்களும், 171 கிராம் 800 மி.கிராம்  எடையுள்ள பலமாற்று வெள்ளி இனங்களும் மேலும் வெளிநாட்டுப் பணத்தாள்கள் 110ம் கிடைக்கப்பெற்றன என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!