News September 28, 2025
இது போன்று இன்னும் பல உயிர்களும்..

மரணமடைந்தவர்களின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழும் ஓலம்தான் தமிழ்நாடு முழுவதும் ஒலிக்கிறது. இந்த துயர சம்பவத்தில் கவனிக்கவே படாமல், கால் மிதிகளில் சிக்கி, குப்பைகளுக்கு மத்தியில் உயிரிழந்து கிடக்கும் பூனை ஒன்றின் பரிதாப நிலை, மனதை உலுக்குகிறது. இது போன்று இன்னும் பல வாயில்லா ஜீவன்களும் உயிரை இழந்திருக்கலாம்.
<<-se>>#karurstampede<<>>
Similar News
News September 28, 2025
கரூர் துயரத்தில் மரணித்த இளம்ஜோடி

கரூர் துயரத்தில் திருமணம் செய்யவிருந்த இளம் ஜோடி பூக்காமல் செடியிலேயே மரணத்திருக்கிறது. கோகுலஸ்ரீ – ஆகாஷுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்தது. இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடத்த நிலையில், வருங்கால மனைவியுடன் விஜய்யை பார்த்துட்டு வரேன்னு சொல்லிவிட்டு ஆகாஷ் கரூர் சென்று இருக்கிறார். பொண்ணு மாப்பிள்ளையாக ஜோடியாக சென்றவர்கள் திரும்பி வரவில்லை.
News September 28, 2025
மூலிகை: கொடுக்காய்ப்புளியின் மருத்துவ குணங்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, *கொடுக்காய்ப்புளியை தினமும் சாப்பிட்டு வந்தால், வாத நோய் ஏற்படாது *ஜீரண சக்தியை அதிகரிக்கும் *கொடுக்காய்ப்புளியின் பூ, பல்வலி, ஈறு பிரச்னைக்கு தீர்வளிக்கும் *தோல் அழற்சி, வீக்கம், அரிப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது *வயிற்றின் அமிலத்தன்மையை குறைக்க உதவும் *கொடுக்காய்ப்புளியின் கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். SHARE.
News September 28, 2025
காவல்துறையினர் சரியான பாதுகாப்பு அளிக்கவில்லை: EPS

தவெக பரப்புரையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுக்கு, காவல்துறை முறையாக பாதுகாப்பு அளிக்காததே காரணம் என EPS குற்றம்சாட்டியுள்ளார். ஆளும் கட்சிகளின் கூட்டங்களுக்கு மட்டுமே முறையான போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படுவதாகவும் அவர் சாடியுள்ளார். விஜய் நடத்திய மற்ற கூட்டங்களை பார்த்து அதற்கு ஏற்றார் போல, போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால், துயரத்தை தடுத்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.