News November 22, 2024
பும்ராவை செல்லமாக புகழ்ந்த மனைவி

பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் வைத்த இன்ஸ்டா ஸ்டோரி வைரலாகி வருகிறது. ஆஸி.,-க்கு எதிரான இன்றைய போட்டியில், 4 விக்கெட்களை பும்ரா கைப்பற்றினார். IND அணியின் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க சொதப்பிய நிலையில், AUS அணியின் பேட்டிங் ஆர்டரை, கேப்டன் பும்ரா தனது ஸ்விங்கால் நிலைகுலைய செய்தார். இதை செல்லமாக புகழ்ந்த பும்ராவின் மனைவி, ‘சிறந்த பவுலர்.. அதைவிட சிறப்பான பின்னழகு’ என இன்ஸ்டா ஸ்டோரி வைத்துள்ளார்.
Similar News
News February 11, 2026
சிவ ராத்திரி, வார விடுமுறை.. சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

மகா சிவராத்திரி, வார விடுமுறையையொட்டி, மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, சிறப்பு பஸ்களை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து நாளை(பிப்.12) முதல் 3 நாள்களுக்கு சுமார் 750 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். tnstc இணையதளம் மற்றும் செல்போன் செயலியில் டிக்கெட்டை புக் செய்யுங்கள்.
News February 11, 2026
வந்தே மாதரம்… இனி நீக்கப்பட்ட வரிகளையும் பாட உத்தரவு!

வந்தே மாதரம் பாடலில் நாட்டை பெண் தெய்வங்களுடன் ஒப்பிடும் வரிகள் இருப்பதால் சிறுபான்மையினரின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, 1937-ல் முதல் இரண்டு பத்திகளை மட்டும் தேசியப் பாடலாக காங்., அங்கீகரித்தது. அது 1950-ல் அதிகாரப்பூர்வமானது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பாஜக அரசு, தற்போது நீக்கப்பட்ட வரிகளையும் சேர்த்தே வந்தே மாதரத்தை இசைக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
News February 11, 2026
ஆட்சியில் பங்கில்லை என்பது CM கருத்து: செல்வப்பெருந்தகை

TN-க்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என CM சொன்னது அவருடைய கருத்து என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இவ்விவகாரத்தில் CM கருத்துக்கு <<19109470>>மாணிக்கம் தாகூர்<<>> எதிர்வினை ஆற்றியதை பற்றி பேசிய அவர், கருத்து தெரிவித்தாலே கூட்டணியில் பிளவு என்று அர்த்தமா என கேட்டுள்ளார். மேலும், இது குறித்து திமுக தலைமையும், காங்., தலைமையும் ஆலோசித்து முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளார்.


