News April 25, 2024

வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்

image

வட தமிழக உள் மாவட்டங்களில் இயல்பை விட 3 -5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே, கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெப்பநிலை மேலும் உயர உள்ளது. அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது அசெளகரியம் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், மதிய நேரத்தில் கர்ப்பிணிகள், முதியோர் வெளியே வருவதை தவிர்க்கவும்.

Similar News

News September 23, 2025

திருப்பத்தூர்: ரயில்வேயில் வேலை! – NO EXAM

image

திருப்பத்தூர் மக்களே, தெற்கு ரயில்வேயில் 3518 அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th, 12th, ITI தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தேர்வு ஏதும் கிடையாது. இதற்கு மாதம் ரூ.7000 வழங்கப்படும். இந்த பணிக்கு 15-24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து செப்.25க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு ஏதும் இல்லாமல் மத்திய அரசு வேலை பெற செம்ம வாய்ப்பு. ஷேர்!

News September 23, 2025

தூங்காமல் நான் காணும் சொப்பனமே..

image

சில்லென்று காற்றாய் வந்து, கனவாய் கலைந்த சில்க் ஸ்மிதாவுக்கு இன்று பிறந்தநாள். நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில், அந்தக்கால 80ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமல்ல, 90ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் என ஜெனரேஷன் கடந்தும் கனவுக்கன்னியாக இருக்கிறார் சில்க். தென்னிந்தியா சூப்பர் ஸ்டார்கள் பலரும் இவரின் கால்ஷீட்டுக்காக தவம் கிடந்த காலமும் உண்டு. உங்களுக்கு பிடித்த சில்க் ஸ்மிதா பாட்டு எது? வாழ்த்தை Likes-ஆக கொடுங்க.

News September 23, 2025

AI-ஆல் பெண்களுக்கு தான் அதிக பாதிப்பா!

image

AI-ஆல் ஆண்களை விட பெண்கள் வேலையிழக்கும் அபாயம் அதிகம் என ஐநா தெரிவித்துள்ளது. தொழில்நுட்பத்துறையில் பெண்களின் 28% வேலைகளும், ஆண்களின் 21% வேலைகளும் AI-ஆல் செய்யமுடியும். இதற்கு, இத்துறையில் பெண்கள் குறைவாக இருப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால், 2030-க்குள் 34.3 கோடி பெண்கள் பாதிக்கப்படலாம். எனவே, இந்த பாலின பாகுபாடை உடனடியாக சரி செய்ய ஐநா வலியுறுத்தியுள்ளது.

error: Content is protected !!