News March 29, 2024

கொல்கத்தா அணிக்கு 183 ரன்கள் இலக்கு

image

பெங்களூருவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி 182/6 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக ஆடிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 83* ரன்கள் குவித்தார். கேமரூன் கிரீன் 33, மேக்ஸ்வெல் 28, தினேஷ் கார்த்திக் 20 ரன்கள் எடுத்தனர். KKR அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பாக ஆடி ரன்கள் குவித்த கோலி, அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியும் வென்றார்.

Similar News

News December 29, 2025

தீபம் ஏற்றக்கூடிய நாள் வரும்: ஜி.ஆர்.சுவாமிநாதன்

image

தனக்கும் தீபத்திற்கும் என்ன பொருத்தம் என்றே தெரியவில்லை என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார். நூல் வெளியீட்டு விழா ஒன்றில், குத்துவிளக்கு ஏற்ற தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி ஏமாற்றமடைந்ததாக தெரிவித்தார். ஆனால், தீபம் ஏற்றக்கூடிய நாள் வரும் என நம்புவதாக பேசினார். தி.குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என அவர் உத்தரவிட்டதற்கு எதிராக வழக்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

News December 29, 2025

டிசம்பர் 29: வரலாற்றில் இன்று

image

*1904 – கவிஞர் குவெம்பு பிறந்தநாள்
*1960 – ஆஸ்திரேலிய வீரர் டேவிட் பூன் பிறந்தநாள்
*1974 – நடிகை டுவிங்கிள் கன்னா பிறந்தநாள்
*1987 – 326 நாள்கள் விண்வெளி பயணத்தை நிறைவு செய்து சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ பூமி திரும்பினார்
*2015 – அறிஞர் தமிழண்ணல் நினைவுநாள்

News December 29, 2025

ரேபிட் செஸ்: இந்தியாவுக்கு 2 வெண்கலம்

image

உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 2 வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவர் பிரிவில் 13 சுற்றுகள் முடிவில், 4 வீரர்கள் தலா 9.5 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பிடித்தனர். இதையடுத்து டை பிரேக்கரில் அர்ஜுன் எரிகைசி 3-ம் இடம் பெற்று வெண்கலம் வென்றார். மகளிர் பிரிவில் 11 சுற்றுகள் முடிவில், கோனெரு ஹம்பி வெண்கல பதக்கத்தை வசப்படுத்தினார். மேக்னஸ் கார்ல்சன் 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

error: Content is protected !!