News March 29, 2024
கொல்கத்தா அணிக்கு 183 ரன்கள் இலக்கு

பெங்களூருவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி 182/6 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக ஆடிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 83* ரன்கள் குவித்தார். கேமரூன் கிரீன் 33, மேக்ஸ்வெல் 28, தினேஷ் கார்த்திக் 20 ரன்கள் எடுத்தனர். KKR அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பாக ஆடி ரன்கள் குவித்த கோலி, அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியும் வென்றார்.
Similar News
News January 13, 2026
17 மாவட்டங்களில் மழை பொழியும்

TN-ல் அடுத்த 3 மணி நேரத்திற்கு ( நள்ளிரவு 1 மணி வரை ) 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சை, நீலகிரி, திருச்சி, திருவாரூர், திருப்பூர், விழுப்புரத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. உங்க ஊரில் மழை பெய்யுதா?
News January 13, 2026
காலைக் கடன் கழிப்பதில் சிரமமா? ஒரே நாளில் தீர்வு

மலச்சிக்கல் பிரச்னையால் அவதிப்படுறீங்களா? கவலையவிடுங்க. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்த திரிபலா தூள் இதற்கு தீர்வாக அமையும். 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் இந்த பொடியை சேர்த்து தேன் கலந்து குடியுங்கள். இதனை படுக்கைக்கு செல்வதற்கு முன்பு (அ) அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பிரச்னை தீரும். பலருக்கும் பயனளிக்கும் தகவலை SHARE பண்ணுங்க.
News January 12, 2026
அதிமுக கூட்டணியில் அமமுக இணைகிறதா?

அதிமுக கூட்டணியில் இன்னும் ஓரிரு நாள்களில் புதிய கட்சிகள் இணையும் என EPS தெரிவித்திருந்தார். இந்நிலையில், கூட்டணியில் டிடிவி தினகரனை சேர்க்க பாஜக தலைமையிடம் EPS சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோளிங்கர், பாபநாசம், ஆண்டிப்பட்டி, சாத்தூர், தாம்பரம் உள்ளிட்ட 7 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளதாகவும், இதுகுறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.


