News October 16, 2025
ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை

இன்று (அக்.16) வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்படுகிறது. சென்செக்ஸ் 367 புள்ளிகள் உயர்ந்து 82,972 புள்ளிகளிலும், நிஃப்டி 109.10 புள்ளிகள் அதிகரித்து 25,433 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. ITI, Whirlpool, Titan ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் உள்ள நிலையில், HDFC Life Insurace உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவில் உள்ளன.
Similar News
News October 16, 2025
50% வரியின் தாக்கம்: USA-க்கான இந்தியாவின் ஏற்றுமதி சரிவு!

USA அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு 50% வரி விதித்ததை அடுத்து, செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி சுமார் 12% குறைந்துள்ளது. இதனால் சுமார் ₹48,337 கோடி வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் அதேநேரம், மொத்த ஏற்றுமதி 6.7% உயர்ந்து சுமார் ₹3.2 லட்சம் கோடியாக உள்ளது. இந்நிலையில், சரியான ஏற்றுமதி உத்திகள் மூலம், இந்தியா தனது உலகளாவிய இருப்பை வலுப்படுத்த முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
News October 16, 2025
அரசன் படத்தின் அசத்தல் அப்டேட்!

பெரிதும் எதிர்பார்க்கப்படும் சிம்புவின் ‘அரசன்’ படத்தின் ப்ரோமோ தியேட்டரில் இன்று மாலை 6:02 மணிக்கு வெளியாகிறது. இதனை முன்னிட்டு, படத்தின் புது போஸ்டர் ஒன்றை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில், வடசென்னை யூனிவர்சில் தான் இப்படத்தின் கதைக்களமும் அமைந்துள்ளது. அனிருத் இசையில் உருவாகி வரும் படத்தின் ப்ரொமோ நாளை யூடியூப்பில் காலை 10: 07 மணிக்கு வெளியாகிறது.
News October 16, 2025
கவர்னருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை அருகே சித்த மருத்துவ பல்கலை., அமைப்பதற்கான மசோதாவை கவர்னர் கிடப்பில் போட்டுள்ளார். இந்த மசோதாவில் பல்கலைக்கு வேந்தராக முதல்வரே இருப்பார் எனும் அம்சம் உள்ளது. இதனை கவர்னர் திருத்த சொல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சட்ட முன்வடிவை திருத்தும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என CM ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.