News October 27, 2024

அதிமுக போட்ட விதையே த.வெ.க..!

image

2011-ம் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவை அளித்திருந்தார் விஜய். ஆனால், ‘தலைவா’ படத்தில் இருந்த ‘Time to lead’ என்ற டேக் லைன் அதிமுகவில் இருந்து நெருக்கடியை கொடுத்தது. பிற மாநிலங்களில் படம் வெளியான போதிலும், தமிழகத்தில் வெளிவர தாமதமானது. அப்போது முதல்வர் ஜெயலலிதாவின் உதவியை நாடி விஜய் பேசிய வீடியோ இன்றளவும் வைரல். இதுவே விஜய்யை அரசியல் நோக்கி பயணிக்க வைத்தது என்று சொல்லலாம்.

Similar News

News July 9, 2025

மாடுகளுடன் மாநாடு! பணிகளை ஆய்வு செய்த சீமான்

image

ஆடு, மாடுகளிடம் குறைகளை கேட்டறிந்து அரசிடம் சொல்லப்படும் என்பது போல் <<16951728>>ஒரு மாநாட்டை<<>> சீமான் நடத்த உள்ளார். மதுரை விராதனூர் பகுதியில் மாநாடு நாளை மாலை நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மாடுகள் இருக்கும் இடத்தில் சுற்றி இரும்பு வேலிகள் அமைத்து, அதற்கு முன்பாக ஒரு மேடை போடப்பட்டு அதில் சீமான் பேச உள்ளார். இந்நிலையில் மைக்கில் பேசி மாடுகள் மிரளுகின்றதா என சீமான் நேரில் ஆய்வு செய்தார்.

News July 9, 2025

சர்வதேச சந்தையில் சரியும் தங்கம் விலை!

image

உலக சந்தையில் தங்கம் விலை இன்று (ஜூலை 9) ஒரே நாளில் 42 டாலர்கள்(₹3,606) சரிந்து 3,254 டாலருக்கு விற்பனையாகிறது. உலக சந்தையில் தங்கம் விலை சரிவு, இந்தியப் பங்குச்சந்தைகளில் பெரிய அளவில் மாறாததே <<17001872>>தங்கம் விலை இன்று<<>> குறையக் காரணம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். உலக சந்தையில் இதே நிலை நீடித்தால் வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் சரியுமாம்.

News July 9, 2025

காதலியை ஐபிஎஸ் ஆக்க இப்படி ஒரு வழியா?

image

வடமாநிலங்களில் வேண்டுதலுக்காக பக்தர்கள் கங்கை நீர் காவடி சுமக்கும் வழக்கம் உண்டு. அப்படி ஹரித்துவாரில், காவடியில் இருபுறமும் கங்கை நீரை சுமந்துகொண்டு வந்த இளைஞர் கவனம் ஈர்த்துள்ளார். அவரின் வேண்டுதல் என்ன தெரியுமா? அவரின் காதலி இப்போதுதான் பிளஸ் டூ முடித்துள்ளாராம். அவர் படித்து ஐபிஎஸ் ஆகும்வரை கங்கை காவடி தூக்குவதாக வேண்டுதலாம். ஐபிஎஸ் ஆனபின் அப்பெண்ணை கல்யாணம் செய்துகொள்வாராம்.

error: Content is protected !!