News May 16, 2024

தொகுப்பாளரை பலாத்காரம் செய்த பூசாரி

image

சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் டிவி பெண் தொகுப்பாளரை மயக்கமருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். அவர் அளித்த புகாரில் “பூசாரி கார்த்திக் கொடுத்த கோயில் தீர்த்தத்தை குடித்ததுமே மயக்கமடைந்தேன். பிறகு, கண்விழித்து பார்த்தபோது நான் நிர்வாணமாக படுக்கையறையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக” குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News February 7, 2026

அறுபடை வீடுகளுக்கும் செல்வாரா PM மோடி?

image

மார்ச் 1-ல் மதுரையில் நடைபெறவுள்ள NDA பொதுக்கூட்டத்தில் PM மோடி பங்கேற்கவுள்ளார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வாய்ப்புள்ளதாக நயினார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அறுபடை வீடுகளுக்கும் PM மோடி சென்று தரிசனம் செய்துவிட்டு, கோயில் நிர்வாகங்கள் எப்படி இருக்கின்றன என்பதை அவர் பார்க்க வேண்டும் என அமைச்சர் சேகர் பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News February 7, 2026

10th Pass போதும்.. ₹28,000 சம்பளம்: APPLY NOW

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 22,000 குரூப் – D பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி: 10th, ஐடிஐ. வயதுவரம்பு: 18- 33 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.2.2026. சம்பளம்: ₹28,000 வரை கிடைக்கும். விண்ணப்பக் கட்டணம்: பட்டியலினத்தவர்களுக்கு ₹250, மற்றவர்களுக்கு ₹500. <>www.rrbappyl.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். SHARE.

News February 7, 2026

இந்தியா – அமெரிக்கா இடையே புதிய அத்தியாயம்: PM மோடி

image

‘வளர்ந்த பாரதம் 2047’ உருவாக்கும் புதிய ஒப்பந்தங்கள் இந்தியா – USA இடையே கையெழுத்தாகியுள்ளதாக PM மோடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விவசாயிகள், MSME, ஸ்டார்ட்அப், மீனவர்கள் என பலருக்கும் வாய்ப்புகளை அள்ளித் தரும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவில் முதலீடுகள் குவிய வழிவகுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!