News September 29, 2025

3 பேரின் ஆட்டம் அபாரம்: தினேஷ் கார்த்திக்

image

பாக்.,-ஐ 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இதற்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், தினேஷ் கார்த்திக் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். ஃபைனலில் திலக் வர்மா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ் ஆகியோரின் சிறந்த முயற்சியையும் குறிப்பிட்டு வாழ்த்து கூறியுள்ளார். குல்தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். திலக் 69 ரன்கள் விளாசி களத்தில் இருந்தார்.

Similar News

News September 29, 2025

கரூர் துயரம்: விஜய் மீது குற்றம் சுமத்தும் DMK கூட்டணி கட்சிகள்

image

கரூர் விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் சந்தேகம் எழுப்பும் நிலையில், திமுக கூட்டணி தலைவர்களான திருமா, வேல்முருகன் உள்ளிட்டோர் விஜய் மீது குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, பரப்புரையில் சரியான திட்டமிடல் இல்லை, கட்டுக்கோப்பு இல்லை; விஜய்யின் காலதாமதமான வருகை போன்ற பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டுகின்றனர். சரியான திட்டமிடல் இருந்தால் உயிர் சேதத்தை தவிர்த்து இருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர்.

News September 29, 2025

உறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியமா இருக்கணுமா?

image

வைட்டமின் சி, நார்ச்சத்து போன்ற பல பண்புகள் நிறைந்த முள்ளங்கி, கிட்னியை சுத்தப்படுத்துகிறது. முள்ளங்கியை காய்கறியாகவும், அதன் இலையை கீரையாகவும் சாப்பிடலாம். இது குடல் ஆரோக்கிய மேம்பாடு, கல்லீரல் & சிறுநீரக நச்சு நீக்கம், மலச்சிக்கல் போன்றவற்றை சரி செய்யும். இதிலுள்ள பொட்டாசியம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இத்தனை நன்மைகள் கொண்ட காயை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News September 29, 2025

கரூர் துயரத்தில் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள்

image

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், அண்ணாமலை, EPS, கிருஷ்ணசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சந்தேகம் எழுப்புகின்றனர். பரப்புரையின்போது மின்சாரம் துண்டிப்பு, போலீஸ் தடியடி, குறுகிய இடத்தில் அனுமதி, ஆம்புலன்ஸ் நுழைந்தது என பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, குறுகிய இடத்தில் விஜய்க்கு அனுமதி அளிப்பது தவறு என, சில நாள்களுக்கு முன்பே சிலர் எச்சரித்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!