News April 2, 2025
தமிழ்நாட்டில் தற்கொலை எண்ணிக்கை அதிகம்

2022ஆம் ஆண்டு நாட்டில் மொத்தம், 1,70,924 பேர் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் மட்டும், 19,834 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நாட்டிலேயே தற்கொலையில் மகாராஷ்டிராவுக்கு (22,746) அடுத்த இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை மக்கள் உணர வேண்டும். உதவிக்கு அழைக்கவும்: +91 044 2656 4444
Similar News
News March 31, 2026
2 நாள்களுக்குள் வேட்பாளர் பட்டியல் வரும்: பியூஷ் கோயல்

தமிழகத்தில் மாநில கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். ஆனால் தேசிய கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் இதுவரை வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. பாஜகவின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் 2 நாள்களில் பட்டியல் வெளியாகும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
News March 31, 2026
BREAKING: விலகினார்.. ஸ்டாலினுக்கு அதிர்ச்சி

சீட் மறுப்பால் பல நிர்வாகிகள் கட்சிகளில் இருந்து விலகி வருகின்றனர். அந்தவகையில், திமுக Ex MP சண்முகத்தின் மகனும், குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய செயலாளருமான சுரேஷ்குமார், கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சில ஆதிக்க சக்திகள் தனக்கு அழுத்தம் கொடுத்ததாக, அவர் தலைமைக்கு எழுதிய விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு நிர்வாகிகள் விலகுவது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.
News March 31, 2026
சிலிண்டர் புக்கிங்கால் சிக்கிய தலைமறைவு குற்றவாளி

ம.பி.,யில் மனைவியை கொன்ற வழக்கில், 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த Ex ராணுவ கேப்டனை கேஸ் புக்கிங்கை வைத்து போலீஸ் கைது செய்துள்ளனர். 2013-ல் மனைவியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவருக்கு, 2022-ல் ஐகோர்ட் தண்டனையை உறுதிசெய்தது. அதன்பிறகு சரணடையாமல் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில்தான் கேஸ் புக்கிங் செய்த சந்தீப்பின் Bank Account-ஐ போலீஸ் டிராக் செய்து கையும் களவுமாக பிடித்துள்ளனர்.


