News March 17, 2024
இரண்டாவது குழந்தையை பெற்ற மறைந்த பாடகரின் தாய்

மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் தாயார் சரண் கவுருக்கு குழந்தை பிறந்துள்ளது. 58 வயதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை, சித்துவின் தந்தை பால்கர் சிங் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். சித்து கடந்த 2022இல் கொலை செய்யப்பட்ட பின், அவரது பெற்றோர்களான சரண் கவுர் (58) பால்கவுர் சிங் (60) ஐவிஎஃப் மூலம் மற்றொரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர். பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News April 26, 2025
2ஆவது நாளாக தங்கம் விலையில் மாற்றமில்லை

கடந்த 22-ம் தேதி 1 கிராம் தங்கம் ரூ.9,290ஆகவும், சவரன் தங்கம் ரூ.74,320ஆகவும் அதிகரித்து உச்சம் தொட்டது. எனினும் 23, 24-ம் தேதிகளில் தங்கம் விலை குறைந்தது. 24-ம் தேதி 1 கிராம் ரூ.9,005ஆகவும், 1 சவரன் ரூ.72,040ஆகவும் விற்பனையானது. ஆனால் நேற்று அந்த விலை மாற்றப்படவில்லை. அதேபோல் இன்றும் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சர்வதேச சந்தையில் தங்க விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
News April 26, 2025
உணவை வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்..?

நம்மில் பலரும் சாப்பிடும் போது, உணவை வேகமாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களே. ஆனால், இதனால் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது தெரியுமா? உணவை மெதுவாக மென்று உண்ணுபவர்கள் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம் வயிறு நிரம்பியிருப்பதை உணர நமது மூளை நேரமாகும். இதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவோம். வயிறு நிரம்பியிருப்பதை உணர, மூளைக்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகுமாம்.
News April 26, 2025
சர்வதேச விசாரணை கோரும் பாகிஸ்தான்

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பேட்டி ஒன்றில் எந்த ஆதாரமும் இன்றி இந்தியா தங்களை குற்றம்சாட்டி வருவதாக பாக். பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார். போர் வெடிப்பதை விரும்பவில்லை என தெரிவித்த அவர் போரால் பேரழிவு மட்டுமே ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.