News September 30, 2025
சீனா வரை அதிர்வலையை ஏற்படுத்திய கரூர் சம்பவம்

கரூரில் பலியானோருக்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் குவோ ஜியான்குன், பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார். சீனாவின் இரங்கல் செய்தி மூலம் கரூர் பெரும் துயரச் சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருப்பது அறியமுடிகிறது. இதுகுறித்து உங்கள் கருத்து?
Similar News
News March 27, 2026
மறைந்த முன்னாள் அமைச்சரின் மகனுக்கு சீட்

MGR காலத்தில் இருந்தே அதிமுகவின் முக்கிய முகமாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பால் துரைக்கண்ணு உயிரிழந்த நிலையில், அவரது மகன் சண்முக பிரபு அரசியலில் நுழைந்தார். தற்போது, துரைக்கண்ணு போட்டியிட்டு வெற்றிபெற்ற அதே பாபநாசம் தொகுதியில் பிரபுவை வேட்பாளராக அறிவித்துள்ளது அதிமுக தலைமை. <<-se>>#TNElection2026<<>>
News March 27, 2026
2 சிட்டிங் தொகுதிகளை விட்டு கொடுத்த காங்கிரஸ்

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 23 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள 5 தொகுதிகளை உறுதி செய்ய திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் கடந்த தேர்தலில் காங்., வென்ற விருத்தாச்சலம், தென்காசியை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
News March 27, 2026
அமெரிக்கா விடுத்த கெடு.. உறுதியாக உள்ள ஈரான்

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஏப்ரல் 6-ம் தேதி வரை டிரம்ப் கெடு விதித்திருந்த நிலையில், அந்நாடு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேசமயம் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் செல்ல எந்த தடையும் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.


