News April 3, 2025
இறப்பிலும் பிரியாத பாசமலர்கள்…!

உடன் பிறந்தவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு சரியாக பேசுவது கூட இல்லை. ஆனால், தம்பி இறந்த துக்கத்தில் அக்காவும் உயிரை விட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது. சிங்கம்புணரி அருகே மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருதன்(49) உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து, கதறி அழுத அவரது அக்கா புஷ்பம் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இருவரின் உடல்களையும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 6, 2025
டிச.19-ல் இலவச லேப்டாப் வழங்கும் CM ஸ்டாலின்

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை வரும் 19-ம் தேதி CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நந்தனத்தில் நடைபெறவுள்ள விழாவில் முதற்கட்டமாக 20 மாணவர்களுக்கு CM ஸ்டாலின் லேப்டாப் வழங்க உள்ளார். 2026 பிப். மாத இறுதிக்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க அரசு 3 நிறுவனங்களுக்கு டென்டர் ஒதுக்கீடு செய்துள்ளது.
News December 6, 2025
BREAKING: விஜய் கட்சியில் இணையவில்லை

விஜய்யுடன் இணையவிருப்பதாக வரும் தகவலில் உண்மை இல்லை என Ex அமைச்சரும், OPS அணி MLA-வுமான வைத்திலிங்கம் கூறியுள்ளார். OPS அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். அதன் பின்னர், தவெகவில் இணைந்த செங்கோட்டையன், வைத்திலிங்கத்திற்கு அழைப்பு விடுத்ததாக பேசப்பட்டது. பேரவைத் தேர்தல் நெருங்குவதால் திமுக, அதிமுக, உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக்கட்சியினரை வளைக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.
News December 6, 2025
விமானங்கள் ரத்து: ரயில்களில் கூடுதல் பெட்டிகள்!

<<18473444>>இண்டிகோ<<>> நிறுவன பிரச்னையால் ஏற்பட்டுள்ள விமானங்களின் ரத்து காரணமாக, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நெருக்கடியை குறைக்க, இந்திய ரயில்வே நிர்வாகம் 37 முக்கிய ரயில்களில் 116 கூடுதல் பெட்டிகளை இணைத்துள்ளது. மேலும், 114 கூடுதல் பயணங்களையும் (Trips) அறிவித்துள்ளது. அதிகபட்சமாக தெற்கு ரயில்வேயில் மட்டும் 18 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.


