News August 5, 2024

ஐந்து மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு

image

நாமக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் MR.விஜயபாஸ்கர் தொடர்புடைய 3 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நிறைவடைந்துள்ளது. நாமக்கல், கரூர் சிபிசிஐடி போலீசார் இணைந்து கரூரில் உள்ள கட்டுமான நிறுவனம், சேலம் சாலையில் உள்ள ஜி.ஆர்.எம் மற்றும் பொன் நகரில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News March 13, 2026

ராசி பலன்கள் (13.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News March 13, 2026

9-வது வயதில் செஸ்ஸில் நம்பர் 1

image

தமிழகத்தைச் சேர்ந்த 9 வயது சதுரங்க சாம்பியன் தமிழமுதன், 9 வயதுக்குட்பட்ட பிரிவில் உலக நம்பர் 1 இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். மேலும், 2000 Elo ரேட்டிங் புள்ளிகளைக் கடந்த உலகின் மிக இளம் வயது வீரர் என்ற சாதனையைப் அவர் படைத்துள்ளார். தன்னுடைய 4-ம் வயதில் உறவினர்கள் மூலம் செஸ் கற்றுக்கொண்ட தமிழமுதன், தொடர் பயிற்சியால் சிறந்த செஸ் வீரராக உருவெடுத்துள்ளார்.

News March 13, 2026

நல்லவங்க எல்லாம் கோபப்படாம இருக்கீங்க… கமல்

image

பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரீக சமுதாயமாக கருதவே முடியாது என கமல் தெரிவித்துள்ளார். மகாநதி படத்தில் வரும் ‘நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது’ என்ற வரிகளை சுட்டிக்காட்டி அந்த கோபம் என்னுள் இன்னும் தீரவில்லை எனவும் SM-ல் பதிவிட்டுள்ளார். தூத்துக்குடி <<19360739>>பாலியல் வன்கொடுமை<<>> வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

error: Content is protected !!