News August 5, 2024
ஐந்து மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு

நாமக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் MR.விஜயபாஸ்கர் தொடர்புடைய 3 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நிறைவடைந்துள்ளது. நாமக்கல், கரூர் சிபிசிஐடி போலீசார் இணைந்து கரூரில் உள்ள கட்டுமான நிறுவனம், சேலம் சாலையில் உள்ள ஜி.ஆர்.எம் மற்றும் பொன் நகரில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News January 19, 2026
பிறந்த குழந்தைக்கு தண்ணீர் கொடுக்குறீங்களா.. ALERT!

குழந்தை பிறந்து முதல் 6 மாதங்களுக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு தேவையான நீர் இருக்கும் என்பதால் அவசியம் இல்லை. அதையும் மீறி அதிகமாக தண்ணீர் கொடுத்தால் குழந்தைக்கு சேரவேண்டிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போகலாம் என்கின்றனர். 6 மாதங்களுக்கு பிறகு தினமும் 2 – 8 ஸ்பூன் வரை இடைவெளிவிட்டு அவ்வப்போது தண்ணீர் கொடுக்கலாம். SHARE.
News January 19, 2026
உங்கள் தலையில் ₹1.94 லட்சம் கடன் சுமை

தேர்தலுக்காக பல இலவசங்கள் அடங்கிய வாக்குறுதிகளை அறிவிக்க DMK, ADMK கட்சிகள் தயாராகிவிட்டன. இதனிடையே, TN-ன் கடன் ₹9.29 லட்சம் கோடி என்றும், ஒவ்வொருவர் மீதும் தலா ₹1.94 லட்சம் கடன் சுமை உள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. 2016-21 ADMK ஆட்சியில் ₹4.80 லட்சம் கோடியாக இருந்த கடன், 4½ ஆண்டு DMK ஆட்சியில் ₹9.21 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. எனவே கவர்ச்சி அறிவிப்புகள் தேவையா என சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர்.
News January 19, 2026
பீர் குடித்த இளைஞர்கள் மரணம்!

ஆந்திராவில் போட்டி போட்டுக்கொண்டு 19 பாட்டில் பீர் குடித்த 2 மென் பொறியாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கராந்தியையொட்டி சித்தூரை சேர்ந்த 6 இளைஞர்கள் மது அருந்தி கொண்டாடியுள்ளனர். இதில் மணிகுமார்(34), புஷ்பராஜ்(26) இருவரும் 19 பாட்டில் பீர் குடித்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


