News April 15, 2024
கடைசி நேரத்தில் EX எம்எல்ஏ அதிமுகவில் இணைந்தார்

தமாகாவின் முன்னாள் எம்எல்ஏ மணிவர்மா (தண்டராம்பட்டு), அக்கட்சியைச் சேர்ந்த 2500 பேர்களுடன் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தேர்தலுக்கு இன்னும் 4 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பாஜக உடனான கூட்டணியில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை. இதனால், அக்கட்சியில் இருந்து விலகி EX எம்எல்ஏ தனது ஆதாரவாளர்களுடன் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். இது பாஜக கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Similar News
News February 13, 2026
தேர்வு கிடையாது: 10-வது போதும்.. 607 காலியிடங்கள்

மத்திய அரசின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 607 Trade Apprentices பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *ITI முடித்திருக்க வேண்டும் *18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் *இதற்கு தேர்வுகள் கிடையாது *மாதம் ₹11,040 சம்பளமாக வழங்கப்படும் *வரும் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News February 13, 2026
இறந்த பிறகு ஒருவரின் SM கணக்கு என்னவாகும்?

டெக் உலகில் தற்போது ‘Grief Tech’ என்ற புதிய தொழில்நுட்பம் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. அதாவது, ஒருவர் இறந்த பிறகு அவருடைய SM கணக்கில் உள்ள தகவல்களை வைத்து AI வடிவம் கொடுக்கப்படும். அந்த AI உங்களைப் போலவே பேசும், மெசேஜ் செய்யும், நடந்துகொள்ளும். இது நெருக்கமானவர்களை பிரிந்து வாடுபவர்களுக்கு உதவும் என டெக் நிபுணர்கள் கூறுகின்றனர். இனி ஒருவர் உயிரிழந்தாலும் அவர் AI-ஆக வாழலாம். உங்கள் கருத்து?
News February 13, 2026
மகளிர் உரிமைத் தொகை ₹2,000.. யாருக்கெல்லாம் கிடைக்காது?

இன்று உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள மகளிர் உரிமைத் தொகை ₹2,000 யாருக்கெல்லாம் கிடைக்கும் என சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.31 கோடி பயனாளிகளுக்கும் இத்தொகை கிடைக்கும். அதேநேரம், புதிதாக விண்ணப்பித்து ஒப்புதலுக்காக காத்திருப்பவர்களுக்கு தேர்தல் முடிந்தாலும் சில மாதங்கள் கழித்தே கிடைக்கும். ஏனென்றால், அதற்கான பணிகள் தொடங்க தாமதமாகும் என கூறப்படுகிறது.


