News August 6, 2024

மக்களின் கண்ணீர் கடலில் உடல்கள் அடக்கம்

image

நிலச்சரிவில் சிக்கி அடையாளம் தெரியாமல் போன உடல்களுக்கு சீரியல் நம்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. உடற்கூராய்வின் போதே அனைத்து உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு, சீரியல் நம்பரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அடையாளம் தெரியாத உடல்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியப்பின் புதைக்கப்பட்டு வருகின்றன. மேலும், உடலை எடுத்த இடத்தைப் பொறுத்து, இறந்தவர்களின் சமாதிகளில் விரைவில் பெயர் குறிக்கப்படும்.

Similar News

News February 22, 2026

சட்டமன்றத் தேர்தல்: சரக்கு விற்பனை படுஜோர்!

image

தேர்தல் நெருங்கும் நிலையில், TASMAC மது விற்பனை குறித்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது. தினந்தோறும் சராசரியாக ₹150 கோடிக்கு ஆகும் விற்பனை, கடந்த சில தினங்களாக 10% அதிகரித்துள்ளதாம். தேர்தல் அறிவிப்புக்கு பிறகு குறிப்பிட்ட அளவுக்கு மேல் எடுத்துச் சென்றால் பறக்கும்படையினர் பறிமுதல் செய்வார்கள் என்பதால் சட்டவிரோத பதுக்கல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, 180 ML குவார்ட்டர் விற்பனை படுஜோராக நடக்கிறதாம்.

News February 22, 2026

CM ஸ்டாலின் Lion இல்ல.. லையர்: தமிழிசை

image

ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் தானே லயன் என சொல்லும் CM உண்மையில் லயன் கிடையாது லையர்(Liar-பொய்யர்) என தமிழிசை விமர்சித்துள்ளார். CM நிறைய பொய் சொல்வதாக சாடிய அவர், மத்திய அரசு உதவாமல் எப்படி TN முன்னுக்கு வர முடியும் என கேட்டுள்ளார். மேலும், அமைச்சர் நேரு மீது நடவடிக்கை எடுக்க ஆதாரங்கள் இருப்பதாகவும், குற்றங்களை செய்துவிட்டு பழிவாங்கும் நடவடிக்கை என கூறுவது வழக்கமாகிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

News February 22, 2026

PM மோடி தந்திரசாலி: வைகோ

image

வாஜ்பாய் மற்றும் அத்வானி காலத்து பாஜகவுக்கும், தற்போதைய பாஜகவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது என வைகோ கூறியுள்ளார். வாஜ்பாய் மதச்சார்பின்மையை மதித்தவர் என கூறிய அவர், PM மோடி தந்திரசாலி, அவர் TN-ஐ ஏமாற்ற பார்க்கிறார் என்றார். மேலும், வந்தே மாதரத்தை அனைவரும் பாடுவதில் சிக்கல் உள்ளது எனவும் இதை கட்டாயமாக்க முயற்சிப்பது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!