News June 5, 2024
அண்ணாமலை மீது பாஜக மேலிடம் கடும் அதிருப்தி

அதிமுகவுடன் கூட்டணியை முறித்து, தனியாக நின்றால் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கலாம் என அண்ணாமலை உறுதியளித்ததால் அதற்கு சம்மதித்தது பாஜக மேலிடம். ஆனால் தமிழகத்தில் ஒரு இடத்தை கூட வெல்லாமல் படுதோல்வி அடைந்தததால், பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உள்ளது. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலாவது, ஒரு சில இடங்கள் கிடைத்திருக்கும் எனவும், அதை முறித்ததால் அண்ணாமலை மீது கடும் அதிருப்தி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News September 4, 2025
சிறுநீரகத்தை வலிமையாக்க வேண்டுமா?

நம் உடலில் உள்ள கழிவுகள், நச்சுகளை அகற்றுவதில் சிறுநீரகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. சிறுநீரகங்களின் திறனை அதிகரித்து, அவற்றை வலிமையாக்க நாம் உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். அன்னாசிப்பழம், குடைமிளகாய், ஸ்ட்ராபெர்ரி, காளான், முட்டைக்கோஸ், ஆப்பிள், சிவப்பு திராட்சை, முட்டை ஆகிய உணவுகள் இதற்கு உதவும். இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது உங்கள் சிறுநீரகங்களை பாதுகாக்க உதவும்.
News September 4, 2025
சற்றுமுன்: அமைச்சர் துரைமுருகன் கைதாகிறாரா?

<<17612464>>சொத்து குவிப்பு வழக்கில்<<>> நேரில் ஆஜராகாத அமைச்சர் துரைமுருகனை கைது செய்ய சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். குறிப்பாக, CM ஸ்டாலின், வெளிநாட்டில் இருப்பதால் அவருடன் தொலைபேசி வாயிலாக DCM உதயநிதி, சட்ட வல்லுநர்கள் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், மூத்த அமைச்சரான துரைமுருகன் கைது செய்யப்படுவாரோ என்ற பேச்சு எழுந்துள்ளது.
News September 4, 2025
தரவரிசையில் சறுக்கிய தமிழக கல்லூரிகள்

இந்திய கல்லூரிகள் தரவரிசையில் எப்போதும் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே அரசுக் கல்லூரியான சென்னை மாநிலக் கல்லூரி, இந்த ஆண்டு 15-வது இடத்துக்கு சரிந்துள்ளது. 2023-ல் இது 3-ம் இடத்தில் இருந்தது. டாப் 30 கல்லூரிகளில் PSGR கிருஷ்ணம்மாள் (9-வது இடம்), PSG -10, லயோலா -14, கிறிஸ்தவ கல்லூரி -16, மதுரை தியாகராஜர் -20, தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி (22) திருச்சி புனித ஜோசப் (25) இடங்களில் உள்ளன.