News September 4, 2025

தரவரிசையில் சறுக்கிய தமிழக கல்லூரிகள்

image

இந்திய கல்லூரிகள் தரவரிசையில் எப்போதும் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே அரசுக் கல்லூரியான சென்னை மாநிலக் கல்லூரி, இந்த ஆண்டு 15-வது இடத்துக்கு சரிந்துள்ளது. 2023-ல் இது 3-ம் இடத்தில் இருந்தது. டாப் 30 கல்லூரிகளில் PSGR கிருஷ்ணம்மாள் (9-வது இடம்), PSG -10, லயோலா -14, கிறிஸ்தவ கல்லூரி -16, மதுரை தியாகராஜர் -20, தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி (22) திருச்சி புனித ஜோசப் (25) இடங்களில் உள்ளன.

Similar News

News November 10, 2025

பிற மதத்தவர்களும் RSS-ல் இணையலாம்: மோகன் பகவத்

image

RSS பதிவு செய்யப்படாததன் காரணத்தை அதன் தலைவர் மோகன் பகவத் விளக்கியுள்ளார். RSS 1925-ல் நிறுவப்பட்டது, எனவே பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும் என எதிர்பார்பார்ப்பதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்து தர்மம் கூட பதிவு செய்யப்படவில்லை எனவும், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், தங்கள் அடையாளத்தை விட்டு, பாரத மாதாவின் குழந்தைகளாக வந்தால் RSS-ல் இணையலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

News November 10, 2025

மாணவர்களுக்கு மாதம் ₹10,000 ஊக்கத்தொகை

image

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகையை அரசு உயர்த்தியுள்ளது. முழுநேரமாக பயிற்சிபெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத ஊக்கத் தொகை 4,000-ல் இருந்து 10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பகுதிநேரமாக பயிலும் மாணவர்களுக்கான தொகை 5,000 ஆக (முன்பு 2,000) அதிகரிக்கப்பட்டுள்ளது. <>https://hrce.tn.gov.in<<>> இணையதளத்தில் கூடுதல் விவரங்களை பெறலாம். SHARE IT.

News November 10, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 10, ஐப்பசி 24 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:00 AM – 7:30 AM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சஷ்டி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: அனுஷம். ▶சிறப்பு: முகூர்த்த நாள், திங்கள் வழிபாட்டு நாள். ▶வழிபாடு: நெய் தீபம் ஏற்றி வராகி அம்மனை வழிபடுதல்.

error: Content is protected !!