News August 5, 2025
ஆக.21ல் தவெக மாநில மாநாடு

மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு ஆக.21-ம் தேதி நடைபெறும் என்று விஜய் அறிவித்துள்ளார். 25-ம் தேதி மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஆக.27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக முன்கூட்டியே மாநாட்டை நடத்த வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியது. இதனையடுத்து. ஆக.25-ம் தேதிக்கு பதில் 21-ம் தேதி 2-வது தவெக மாநில மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 5, 2025
நடிகர் ஷா நவாஸ் பிரேம் நசீர் காலமானார்!

பிரபல மலையாள நடிகர் ஷா நவாஸ் பிரேம் நசீர்(71) கிட்னி பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். மலையாள சினிமாவின் ஜாம்பவான் பழம்பெரும் நடிகர் பிரேம் நசீரின் மகன் இவர். 1977 முதல் மலையாள மொழி படங்களில் நடித்து வந்த ஷா நவாஸ் கடைசியாக 2022-ல் வெளியான ‘ஜன கன மன’ படத்தில் நடித்திருந்தார். தமிழில் வெளியான ‘ஜாதி பூக்கள்’ (1987) படத்தில் இவர் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 5, 2025
டிகிரி தேவையில்ல, திறமை இருந்தா போதும்!

கல்லூரி டிகிரி முக்கியமல்ல, திறமையும் செயல்திறனும் தான் முக்கியம். நாங்கள் பணியாளரிடம் இதையே எதிர்பார்க்கிறோம் என்கிறார் டாப் டெக் நிறுவனமான Palantir-ன் சிஇஓ அலெக்ஸ் கார்ப். எலான் மஸ்கும் இதையே கூறியிருந்தார். இதன் பொருள் முறையான படிப்பு தேவையில்லை என்பதல்ல; என்ன டிகிரி வாங்கியிருந்தாலும், திறமையும் துறை சார்ந்த அறிவும் இருந்தால் தான் வளர முடியும். நம் பிள்ளைகளும் பெற்றோரும் இதை உணர வேண்டும்.
News August 5, 2025
மக்களை ஏமாற்றும் கட்சி திமுக: இபிஎஸ்

திமுகவை போல் மக்களை ஏமாற்றும் கட்சி அல்ல அதிமுக என EPS தெரிவித்துள்ளார். தென்காசியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளுக்கு பின்பு தான் மக்கள் மீது திமுகவுக்கு அக்கறை வந்துள்ளதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியது தான் திமுக அரசின் சாதனை என்றும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அம்மா மினி கிளினிக் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்தார்.