News August 22, 2025

தவெக மாநாட்டில் சோகம்.. தொண்டர்கள் மரணம்

image

மதுரை தவெக மாநாட்டிற்கு சென்ற அக்கட்சியை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். சென்னையை சேர்ந்த பிரபாகரன்(33) மாநாட்டுக்கு செல்லும் வழியில் சக்கிமங்கலத்தில் உயிரிழந்தார். அதேபோல், மாநாடு முடிந்து நீலகிரி திரும்பி கொண்டிருந்த ரித்திக் ரோஷன்(18) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதே காரில் பயணம் செய்த ரவி(18) வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில், மதுரை GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News March 17, 2026

சேலம்: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE !

image

சேலம் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD <<>>செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 17, 2026

சட்டப்பேரவைத் தேர்தலில் கனிமொழி?

image

தேசிய அரசியலில் கவனம் செலுத்தும் கனிமொழி, மாநில அரசியலிலும் ஈடுபட வேண்டும் என்று அவரின் ஆதரவாளர்கள் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், வரும் தேர்தலில் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, திருச்செந்தூர், பாளையங்கோட்டை, நாங்குநேரி, திருவாரூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கனிமொழி போட்டியிட வேண்டும் என விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

News March 17, 2026

மம்தாவுக்கு எதிராக போட்டியிடும் அவரது EX தளபதி!

image

2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள மே.வங்கத்திற்கு 144 பேரை கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், CM மம்தா பானர்ஜியின் பபானிபூர் தொகுதியில், அம்மாநில எதிர்க்கட்சி தலைவரும், மம்தாவின் EX தேர்தல் படை தளபதியுமாக இருந்த சுவேந்து அதிகாரி களமிறக்கப்பட்டுள்ளார். இவர், 2021 தேர்தலில் மம்தா போட்டியிட்ட மற்றொரு தொகுதியான நந்திகிராமில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!