News June 26, 2024
கென்யாவில் பதற்றம்: இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

வரிகளை உயர்த்தும் சர்ச்சைக்குரிய மசோதாவை கென்யா நாடாளுமன்றம் நிறைவேற்றியதை தொடர்ந்து, அங்கு வன்முறை வெடித்தது. தலைநகர் உள்பட நாடு முழுவதும் போராட்டங்களும், மோதல்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில், அங்கு வாழும் இந்தியர்கள், அத்தியாவசியம் இல்லாமல் வெளியில் நடமாட வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அரசு தரவுகளின்படி, கென்யாவில் 20 ஆயிரம் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
Similar News
News November 5, 2025
தமிழக அரசின் தலையில் நறுக்கு நறுக்கு: விஜய்

நமது குடும்பத்தினர் உயிரிழந்ததால், அமைதிகாத்து வந்தோம். ஆனால், இந்த அமைதியை பயன்படுத்தி திமுகவினர் வன்மத்தை கக்கினர் என்று விஜய் விமர்சித்துள்ளார். எஸ்ஐடி அமைக்க ஐகோர்ட் உத்தரவிட்டதை குதூகலத்துடன் கொண்டாடினர். ஆனால், தனிநபர் ஆணைய விவகாரத்தில் தமிழக அரசின் தலையில் சுப்ரீம் கோர்ட் ‘நறுக்கு நறுக்கு’ என்று கொட்டி அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
CM ஸ்டாலினை அட்டாக் செய்தார் விஜய்

தவெக பொதுக்குழுவில் ‘குறுகிய மனம் கொண்ட முதலமைச்சருக்கு சில கேள்விகள்’ எனக் குறிப்பிட்டு ஸ்டாலினை விஜய் அட்டாக் செய்தார். கரூர் விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின், தவெகவிற்கு எதிராக வன்மத்தை கக்கியதாகவும், பொய்மூட்டைகளையும், அவதூறுகளையும் தெரிவித்ததாகவும், அரசியல் காழ்ப்புணர்வுடன் நேர்மையற்று குற்றம் சாட்டியதாகவும் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
News November 5, 2025
ஒவ்வொரு மாதமும் ₹5000 கிடைக்கும் திட்டம்

அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ₹5000 நிதி, ₹2 லட்சம் மதிப்பிலான காப்பீடு ஆகியவற்றை இ-ஷ்ரம் திட்டம் வழங்குகிறது. நிரந்தர வேலை, ஓய்வூதிய வசதி இல்லாதவர்களுக்கு இத்திட்டம் பெரிய உதவியாக இருக்கும். இதனை பெற 40 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்கும் குறைவாக இருக்கணும். இந்த கார்டை பெற <


