News October 20, 2025

திமுக தலைமை அலுவலகத்தில் பதற்றம்.. போலீஸ் குவிப்பு

image

அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். அண்மைக் காலமாக CM ஸ்டாலின், EPS, ராமதாஸ், ரஜினி, விஜய் உள்ளிட்ட முக்கிய நபர்களின் வீடுகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது போலீசாரை திக்குமுக்காட வைத்துள்ளது.

Similar News

News April 4, 2026

புதுச்சேரி: விஜய் அளித்த வாக்குறுதிகள்

image

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், “துணைநிலை ஆளுநர் தலையீடு இல்லாது, தனி மாநில அந்தஸ்து பெற முழுமையாக முயற்சிக்கப்படும்; மகப்பேறு உதவித் தொகையாக ரூ.25,000 வழங்கப்படும்; அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும்; 100% பயிர்க்காப்பீடு மற்றும் மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கப்படும்.” என வாக்குறுதி அளித்தார்.

News April 4, 2026

மகளிர் வங்கியில் ₹25,000.. சற்றுமுன் அறிவிப்பு வந்தது!

image

புதுச்சேரிக்கு தவெகவின் தேர்தல் அறிக்கையை விஜய் சற்றுமுன் அறிவித்தார். அதில், *துணைநிலை கவர்னரின் தலையீடு இல்லாமல் மாநில அந்தஸ்து கொண்டு வர 100% முயற்சி. *ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல். *மகளிருக்கு மகப்பேறு உதவித்தொகையாக ₹25,000, *இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதித் திட்டம். *மீனவர்களுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு ₹20 மானியம் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

News April 4, 2026

விரக்தியே விஜய் கட்சியில் இணைய காரணம்: தனபால்

image

சமீபத்தில், அதிமுக Ex சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தவெகவில் இணைந்தார். இவர் தற்போது ராசிபுரம் தவெக வேட்பாளராகவும் களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், உடல் நலம் குன்றியிருக்கும் தன்னை வந்து அதிமுகவினர் பார்க்கவில்லை என்ற விரக்தியில்தான் தனது மகன் தவெகவில் இணைந்ததாக தனபால் தனது X பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

error: Content is protected !!