News October 20, 2025
MH-ல் 96 லட்சம் போலி வாக்காளர்கள்: ராஜ் தாக்கரே

மஹாராஷ்டிராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு 96 லட்சம் போலி வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக ராஜ் தாக்கரே ECI மீது குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த போலி வாக்காளர்களை நீக்கும் வரை, தேர்தலை நடத்தக் கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பிஹாரில் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை (SIR) காங்., கடுமையாக எதிர்த்தது. திமுகவும், தமிழகத்தில் SIR-ஐ மேற்கொள்ளக்கூடாது என கூறி வருகிறது.
Similar News
News December 14, 2025
தேனி: மனைவி பிரிவால் கணவருக்கு நேர்ந்த விபரீதம்

அம்மாபட்டியை சேர்ந்த பாண்டியராஜன், தாரணி தம்பதிக்கு 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமான ஒரு மாதத்திலேயே தாரணி கணவரை பிரிந்து சென்றார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாண்டியராஜன் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வீட்டில் இருமிக்கொண்டே இருந்தார். சிகிச்சைக்காக GHக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
News December 14, 2025
BREAKING: நல்லகண்ணு ஹாஸ்பிடலில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (100) சென்னை ராஜீவ் காந்தி அரசு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நிலை முன்னேறியதை அடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், இரவு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு, உடல்நிலை மிக மோசமான நிலையில் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
News December 14, 2025
கேரளாவில் மீண்டும் ஓங்கியது காங்கிரஸின் ‘கை’

கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. 6 மாநகராட்சிகளில் 4-ஐ காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. திருவனந்தபுரத்தில் பாஜகவும், கோழிக்கோட்டில் இடதுசாரிகளும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல், மொத்தமுள்ள 87 நகராட்சிகளில் காங்கிரஸ(UDF)-54, இடதுசாரிகள்(LDF) – 28, பாஜக(NDA) – 2-ஐ கைப்பற்றியுள்ளது. 941 கிராம பஞ்சாயத்துகளில் UDF – 505, LDF -340, NDA – 26, 64 இடங்களில் இழுபறி நீடிக்கிறது.


