News March 17, 2024
ஏப்.19, ஜூன் 4இல் டாஸ்மாக் இயங்காது

தமிழகத்தில் ஏப்.19ம் தேதி வாக்குப்பதிவும், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இதனையொட்டி, இந்த இரண்டு நாட்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இதன்படி, அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மற்றும் பார்கள் இயங்கக்கூடாது. அத்துமீறி, கள்ளத்தனமாக மது விற்பனை செய்தாலோ, டாஸ்மாக் கடைகளை திறந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
Similar News
News October 20, 2025
தலை தீபாவளி கொண்டாடும் திரை நட்சத்திரங்கள்

இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை புதுமண தம்பதிகளுக்கு கொஞ்சம் கூடுதல் ஸ்பெஷல். அந்த வகையில் இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் திரையுலக பிரபலங்கள் யார் யார் என்பதை SWIPE செய்து பாருங்கள்.. அதோடு தலை தீபாவளி வாழ்த்துகளை லைக்ஸ் போட்டு தெரிவிக்கவும்.
News October 20, 2025
விரைவில் வரும் சீமானின் தண்ணீர் மாநாடு

சீமான் ஏற்கெனவே ஆடு, மாடு மாநாடு மற்றும் மலைகளின் மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். அடுத்ததாக தூத்துக்குடியில் கடல் மாநாட்டையும் நடத்துவதாக அறிவித்த சீமான், கடலில் அப்பகுதி மக்களுடன் சென்று ஆய்வு நடத்தினார். இந்நிலையில், தஞ்சையில் நவ.15-ம் தேதி தண்ணீர் மாநாடு நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார். கல்லணை அருகே உள்ள பூதலூர் இந்த மாநாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 20, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 20, ஐப்பசி 3 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்:10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM▶திதி: சதுர்தசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை