News April 22, 2025
UPSC தேர்வில் சாதித்த தமிழர்கள்!

யுபிஎஸ்சி தேர்வில் அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் படித்த சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 23-வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். தனது 5-வது முயற்சியில் கனவை எட்டிப் பிடித்துள்ளதாகவும் ஐபிஎஸ் பணியைத் தேர்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கர் பாண்டியராஜ் ஆகியோரும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். வாழ்த்துக்கள்!
Similar News
News July 11, 2025
என்ன பயணம் போனாலும் இலக்கை அடைய மாட்டார்

இபிஎஸ், பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸாக மாறிவிட்டார் என CM ஸ்டாலின் சாடியுள்ளார். திருவாரூரில் பேசிய அவர், கூவத்தூரில் ஏலம் எடுத்து, கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன் என தமிழகமே பார்க்காத அவல ஆட்சியை நடத்தியதாகக் கடுமையாக விளாசினார். தமிழ்நாடு என சொல்லக்கூடாது என்று கூறும் கூட்டத்துடன் சேர்த்த அவர், எந்தப் பயணம் போனாலும் இறுதியில் இலக்கை அடைய மாட்டார் என விமர்சித்தார்.
News July 11, 2025
B,Pharm 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான B.Pharm 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. D.Pharm படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் ஜூலை 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் <
News July 11, 2025
BREAKING: பள்ளி முதல்வர் அதிரடி கைது!

மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை நடத்திய பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவம் தானேவில் உள்ள RS தமானி பள்ளியில் நடந்துள்ளது. கழிவறையில் ரத்தக்கறை இருந்ததால் அதனை செய்தது யார் என்பதை அறிய இந்த கொடூரத்தை அரங்கேற்றிய பள்ளி முதல்வர் மாதுரி கெய்க்வாட், பெண் ஊழியர் நந்தா இருவரும் நடத்தியது தெரியவந்துள்ளது. இவர்கள் பெண்களா? என நெட்டிசன்கள் சாடுகின்றனர்.