News April 22, 2025
UPSC தேர்வில் சாதித்த தமிழர்கள்!

யுபிஎஸ்சி தேர்வில் அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் படித்த சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 23-வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். தனது 5-வது முயற்சியில் கனவை எட்டிப் பிடித்துள்ளதாகவும் ஐபிஎஸ் பணியைத் தேர்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கர் பாண்டியராஜ் ஆகியோரும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். வாழ்த்துக்கள்!
Similar News
News December 19, 2025
செங்கோட்டையன் அதிரடி.. EPS அதிர்ச்சி

அடுத்தடுத்து கொங்கு மண்டலத்தில் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டமிட்டு வருகிறார். இதன்படி, டிச.30-ல் சேலத்தில் விஜய் பரப்புரை மேற்கொள்ளவுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, ஈரோட்டில் பரப்புரை செய்து கொங்கு பகுதியில் விஜய்க்கான ஆதரவை காண்பித்தார் செங்கோட்டையன். இந்நிலையில், EPS-ன் சொந்த மாவட்டமான சேலத்தில் விஜய்யை களமிறக்கி அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுக்க KAS தயாராகி வருகிறாராம்.
News December 19, 2025
ரேஷன் கார்டுகளுக்கு KYC அப்டேட்.. தமிழக அரசு அறிவிப்பு

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் <<18561240>>KYC அப்டேட்<<>> செய்ய மத்திய அரசு அறிவித்திருந்தது. குறிப்பாக, தமிழகத்தில் 36 லட்சம் பேர் விரல் ரேகையை பதிவு செய்யாமல் இருப்பதாகவும், இதனை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், விரல் ரேகையை பதிவு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக TN அரசு விளக்கம் அளித்துள்ளது. ரேகையை பதிவு செய்யாதவர்கள், உடனடியாக நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 19, 2025
ECI இணையதள சர்வர் முடங்கியது

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியான நிலையில், ECI-ன் இணைய பக்கம் முடங்கியுள்ளது. தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாக ECI அறிவித்தது. இதனையடுத்து, தங்களது பெயர் விடுபட்டிருக்குமா என்ற அச்சத்தில் பலரும் <


