News October 18, 2025

ரஞ்சி கோப்பையில் தமிழக அணி படுதோல்வி

image

ரஞ்சி கோப்பையில், ஜார்க்கண்டுக்கு எதிரான போட்டியில் தமிழக அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. கேப்டன் இஷான் கிஷனின் அதிரடியால் ஜார்க்கண்ட் முதல் இன்னிங்ஸில் 419 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆடிய தமிழகம் முதல் இன்னிங்ஸில் 93 ரன்களுக்கு சுருண்டு பாலோ ஆன் ஆனது. 2-வது இன்னிங்ஸிலும் தமிழக வீரர்கள் சொதப்பலாக ஆடியதால் 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, ஜார்க்கண்ட் 114 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

Similar News

News October 18, 2025

லட்சியமா? காதலா? சமந்தா அட்வைஸ்

image

லட்சியம் (அ) பார்ட்னர், இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் தேர்ந்தெடுப்பது என்பது நியாயமற்றது என சமந்தா கூறியுள்ளார். உங்களுடைய லட்சியங்களை நன்றாக புரிந்துகொள்ளும் ஒரு பார்ட்னரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், நாம் அதிகமாக கவலைப்படுவது பார்ட்னர் உள்ளிட்ட உறவுகளை பற்றித்தான் எனவும் கூறியுள்ளார். நாக சைதன்யாவை பிரிந்த சமந்தா கிசுகிசுக்களிலும் சிக்கி வருகிறார்.

News October 18, 2025

BREAKING: அறிவித்தார் விஜய்

image

கரூர் துயரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தலா ₹20 லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்திக்க சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருவதாகவும், அது கிடைத்ததும் நிச்சயமாக சந்திப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உறவுகளை இழந்தவர்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.

News October 18, 2025

Sports Roundup: வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை

image

*சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில், இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. *இஸ்தான்புல்லில் நடந்த சர்வதேச வாள்வீச்சு தொடரில் பவானி தேவி வெள்ளி வென்றார். உலக ஜூனியர் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் தான்வி சர்மா முன்னேற்றம். *ஆசிய மகளிர் 7’S ரக்பி சீரிஸில், இந்தியா 0-43 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானிடம் படுதோல்வி.

error: Content is protected !!