News October 18, 2025

லட்சியமா? காதலா? சமந்தா அட்வைஸ்

image

லட்சியம் (அ) பார்ட்னர், இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் தேர்ந்தெடுப்பது என்பது நியாயமற்றது என சமந்தா கூறியுள்ளார். உங்களுடைய லட்சியங்களை நன்றாக புரிந்துகொள்ளும் ஒரு பார்ட்னரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், நாம் அதிகமாக கவலைப்படுவது பார்ட்னர் உள்ளிட்ட உறவுகளை பற்றித்தான் எனவும் கூறியுள்ளார். நாக சைதன்யாவை பிரிந்த சமந்தா கிசுகிசுக்களிலும் சிக்கி வருகிறார்.

Similar News

News December 11, 2025

இந்தியாவில் ₹3.14 லட்சம் கோடி முதலீடு செய்யும் அமேசான்

image

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அமேசான் தெரிவித்துள்ளது. இதற்காக ₹3.14 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக அமேசான் அறிவித்துள்ளது. லாஜிஸ்டிக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதால் ஒட்டுமொத்த ஏற்றுமதி 80 பில்லியனாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சிறுதொழில் செய்யும் 1.5 கோடி பேருக்கு AI-ன் பலன்கள் கொண்டு சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 10, 2025

ஜூனியர் ஹாக்கி: ஜெர்மனி சாம்பியன்

image

சென்னையில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் ஜெர்மனி மகுடம் சூடியுள்ளது. இறுதிப்போட்டியில் ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த மோதலில், இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் சமன் ஆனது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ஜெர்மனி சாம்பியனானது. தொடரை சிறப்பாக நடத்திய TN விளையாட்டுத்துறையை பலரும் பாராட்டுகின்றனர்.

News December 10, 2025

ராசி பலன்கள் (11.12.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!