News September 4, 2025
தமிழக அரசில் 1,794 பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: தொழிற்கல்வி. வயதுவரம்பு: 18 – 32. தேர்வு முறை: எழுத்து தேர்வு. சம்பளம்: ₹18,800 – ₹59,900. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.2. தேர்வு நாள்: நவ.16. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News September 5, 2025
பஞ்சாப் CM ஹாஸ்பிடலில் அனுமதி

உடல்நலக் குறைவு காரணமாக பஞ்சாப் CM பகவந்த் மான் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 நாள்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், அவரது வீட்டில் வைத்து டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வந்தனர். இதனால், வெள்ளப் பாதிப்பு பகுதிகளை பார்வையிட அரவிந்த் கெஜ்ரிவால் வந்த போது கூட அவரால் உடன் செல்ல இயலவில்லை. இந்நிலையில், இன்று உடல்நிலை மிகவும் மோசமானதால் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார்.
News September 5, 2025
‘மதராஸி’ படத்திற்கு ஷாலினியின் ரிவ்யூ

‘மதராஸி’ படத்தை நடிகை ஷாலினி ஒற்றை வரியில் ரிவ்யூ செய்துள்ளார். சென்னை சத்யம் தியேட்டரில் சிவகார்த்திகேயன், ஷாலினி மற்றும் சில பிரபலங்கள் ‘மதராஸி’ படத்தின் FDFS-ஐ கண்டுகளித்தனர். படம் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஷாலினி, I Enjoyed the film எனவும், படம் நன்றாக இருக்கிறது என்றும் கூறி அங்கிருந்து வேக வேகமாக புறப்பட்டுச் சென்றார்.
News September 5, 2025
சச்சின் மகளுக்கு நிச்சயதார்த்தம்?

சச்சினின் மகள் சாரா டெண்டுல்கரின் நிச்சயதார்த்தம் தொடர்பான செய்தி வைரலாகி வருகிறது. கோவாவைச் சேர்ந்த ரெஸ்டாரண்ட் ஓனர் சித்தார்த் உடன் சாரா நெருக்கமாக எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை குறிப்பிட்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இதுகுறித்து சச்சின் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.