News September 4, 2025
தரவரிசையில் சறுக்கிய தமிழக கல்லூரிகள்

இந்திய கல்லூரிகள் தரவரிசையில் எப்போதும் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே அரசுக் கல்லூரியான சென்னை மாநிலக் கல்லூரி, இந்த ஆண்டு 15-வது இடத்துக்கு சரிந்துள்ளது. 2023-ல் இது 3-ம் இடத்தில் இருந்தது. டாப் 30 கல்லூரிகளில் PSGR கிருஷ்ணம்மாள் (9-வது இடம்), PSG -10, லயோலா -14, கிறிஸ்தவ கல்லூரி -16, மதுரை தியாகராஜர் -20, தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி (22) திருச்சி புனித ஜோசப் (25) இடங்களில் உள்ளன.
Similar News
News September 4, 2025
4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கோவை, நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்தது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 7-ம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
News September 4, 2025
Parenting: குழந்தைகளின் தவறுகளை சரி செய்வது எப்படி?

பெற்றோர்கள் குழந்தைகளின் சிறிய தவறுகளை கவனித்திருப்பீர்கள். இந்த தவறுகளை சரி செய்ய வேண்டும் என கண்டித்தால், அதை எப்போதும் அவர்கள் திருத்திக்கொள்ள மாட்டார்கள். மாறாக, இந்த 3 எளிய வழிகளை நீங்கள் செய்து பார்க்கலாம். ➤எந்த மாதிரியான சூழலில் தவறு செய்கிறார்கள் என கவனித்து, அதை பொறுமையாக எடுத்துரையுங்கள். ➤எப்படி சரி செய்யலாம் என சொல்லி கொடுங்கள் ➤தவறை திருத்திக் கொண்டால் பாராட்டுங்கள். SHARE.
News September 4, 2025
இந்தியாவின் கௌரவத்தை பாஜக விற்றுவிட்டது: மம்தா

இந்தியாவின் கௌரவத்தை மத்திய பாஜக அரசு வெளிநாட்டு சக்திகளுக்கு விற்றுவிட்டதாக மம்தா பானர்ஜி சாடியுள்ளார். சில நேரங்களில் அமெரிக்காவிடமும், சில நேரங்களில் சீனாவிடமும் பாஜக அரசு கெஞ்சுவதாகவும், அவர்களால் நாட்டை நடத்தவோ, நாட்டின் நலன்களை பாதுகாக்கவோ முடியாது என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், இப்படிப்பட்டவர்கள் தான் ஆள்வது, எப்படி என தங்களுக்கு போதிப்பதாகவும் சாடியுள்ளார்.