News October 22, 2025
புடினிடம் பேசுவது Waste Of Time: டிரம்ப்

உக்ரைன் போர் தொடர்பாக புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தார் டிரம்ப். இன்னும் நேரம் தேவைப்படுவதாக புடின் கூறியதால் ஹங்கேரியில் நேற்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து, புடின் தயாராக இல்லாதபோது அவரை சந்தித்து டைம் வேஸ்ட் செய்ய விரும்பவில்லை என டிரம்ப் கூறியிருக்கிறார். மீண்டும் டிரம்பை சந்திக்க புடின் நேரம் ஒதுக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News October 22, 2025
ரெட்ரோ காரை விற்பனைக்கு கொண்டு வரும் டாடா

1990-ல் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்த Tata Sierra கார் மாடலை, அந்நிறுவனம் அடுத்த மாதம் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. பழைய ரெட்ரோ ஸ்டைலை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு வடிவமைத்து அறிமுகப்படுத்த உள்ளது. முதலில் எரிபொருளில் இயங்கும் மாடலையும், அடுத்ததாக EV மாடலையும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டாடா நிறுவனத்தின் முதல் 3 ஸ்கிரீன் கொண்ட காராகவும் இது இருக்கும்.
News October 22, 2025
காங்கிரஸில் பூகம்பத்தை ஏற்படுத்திய CM மகன்

தனது தந்தை அரசியல் வாழ்வின் இறுதிகட்டத்தில் இருப்பதாக சித்தராமையாவின் மகன் யதிந்திரா பேசியுள்ளது அம்மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, தற்போதைய அமைச்சர் சதிஷ் ஜர்கிஹோலி காங்கிரஸ் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கூறியதும் சர்ச்சையாகியுள்ளது. சித்தராமையா Vs டிகே சிவக்குமார் என்ற இரு துருவ ஆதரவு நிலைப்பாடு இருக்கும் நிலையில், கட்சியில் புதிதாக ஒருவரை யதிந்திரா முன்னிறுத்தியுள்ளார்.
News October 22, 2025
BREAKING: நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை

தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காலை முதல் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய நவ.15(சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களிலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகங்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.