News April 11, 2025
25 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் படத்தில் தபு..!

VJS நடிக்கும் புதிய பான் இந்தியா படத்தில் நடிக்க தபு கமிட்டாகியுள்ளார். தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இப்படத்தை இயக்குகிறார். தபு தமிழில் கடைசியாக 2000ஆம் ஆண்டில் வெளியான ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘சினேகிதியே’ ஆகிய படங்களில் நடித்தார். அதன்பிறகு, 25 ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ஹிந்தி, தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தவர், தற்போது VJS படத்தில் நடிக்க உள்ளார்.
Similar News
News January 6, 2026
சின்மயியை நீக்கிய மோகன் ஜி

திரெளபதி 2 படத்தில் ’எம்கோனே’ பாடலை பாடிய சின்மயிக்கு பதிலாக வேறு பாடகியை பாட வைக்க உள்ளதாக மோகன் ஜி தெரிவித்துள்ளார். முன்னதாக, எம்கோனே பாடலை பாடியதற்காக <<18438965>>மன்னிப்பு<<>> கேட்டுக்கொள்கிறேன். மோகன் ஜி படம் என தெரிந்திருந்தால் பாடியிருக்கவே மாட்டேன் என X-ல் சின்மயி பதிவிட்டது சர்ச்சையானது. அவரது கருத்துக்கு அப்போதே வருத்தம் தெரிவித்த நிலையில், தற்போது சின்மயியின் குரலை நீக்குவதாக இயக்குநர் கூறியுள்ளார்.
News January 6, 2026
பொங்கல் பரிசு.. அரசு மாற்றம் செய்தது

பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ₹3,000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதை CM ஸ்டாலின், ஜன.8-ல் தொடங்கி வைக்கவுள்ளார். இதன்காரணமாக வழக்கமான விடுமுறை நாளான ஜன.9-ம் தேதி வெள்ளிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பிப்.7-ல் விடுமுறை அளிக்கப்படும் என்று உணவு வழங்கல் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
News January 6, 2026
தேர்தலுக்கு பின் CM இதை மறந்துவிடுவார்: RB உதயகுமார்

தேர்தலுக்காக திமுக வழங்கும் திட்டங்கள் மக்களை ஏமாற்றுவதற்காகத்தான் என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். தேர்தல் வரும் போதுதான் CM ஸ்டாலினுக்கு மக்கள் ஞாபகம் வரும் என்ற அவர், தேர்தல் முடிந்த பின்பு மக்களைப் பற்றி சிந்திக்க மறந்து விடுவார் எனவும் விமர்சித்துள்ளார். மேலும், TN-ன் தலையெழுத்தை மாற்றும் சக்தியான EPS மீண்டும் CM-மாக வருவார் எனவும் கூறியுள்ளார்.


