News February 16, 2025
சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

*நூலகம் உருவாகும் போது ஆயிரக்கணக்கான சிறைச்சாலைகளுக்கு பூட்டிடப்படுகிறது.
*உங்கள் மனசே சுத்தமாக வைத்திருக்க வேண்டிய தண்ணீர்தொட்டி.
*பிறரின் பாதையில் செல்லாமல், உன் சொந்த பாதையை தேடு.
*அடிமைத்தனத்தின் அடையாளமாகிய பொறாமையை முற்றிலும் அழிக்க வேண்டும்.
*உனக்கு தேவைப்படும் சக்தியும் உதவியும் அனைத்தும் உன்னுள் உண்டு.
Similar News
News August 11, 2025
கூலி படத்தில் SK?

ரிலீசுக்கு இன்னும் ஓரிரு நாள்களே உள்ள நிலையில், ‘கூலி’ படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. படத்தில் LCU கனெக்ஷனாக புது ரோலில் SK நடித்துள்ளதாகவும் சில நாள்களாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது. ஆனால், தற்போது வெளிவரும் செய்திகளின் படி, SK இந்த படத்தில் நடிக்கவில்லையாம். ‘கூலி’ கதைக்கு முன்பு ரஜினியிடம் லோகேஷ் சொன்ன Fantasy கதையில்தான், SK நடிப்பதாக இருந்ததாம்.
News August 11, 2025
இன்று முதல் இபிஎஸ் மீண்டும் சுற்றுப்பயணம்

இபிஎஸ் 3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை இன்று முதல் தொடங்குகிறார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், இன்று கிருஷ்ணகிரியில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் அவர், 19-ம் தேதி வேலூரில் நிறைவு செய்கிறார். இந்த பயணத்தின்போது மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் கவனித்து வருகின்றனர்.
News August 11, 2025
‘யுத்த நாயகன்’ காலமானார்

ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை குரூப் கேப்டன் டிகே பருல்கார், நேற்று காலமானார். 1965 இந்திய – பாகிஸ்தான் போரின் போது, இவரது விமானம் எதிரிகளால் சுடப்பட்டது. விமானத்தை விட்டுவிட்டு அங்கிருந்து புறப்படுமாறு உயர் அதிகாரிகள் கூறினாலும், விமானத்துடன் நாட்டிற்கு வந்த தீரன் இவர். அதேபோல், 1971 பாகிஸ்தான் போரின் போது, போர் கைதியாக இவர் பிடிபட்டார். ஆனால், அங்கிருந்து தப்பித்து இந்தியா வந்தடைந்தார்.