News April 23, 2025
வெயில்: பகல் 12 to 3 வெளியே வர வேண்டாம்

நாளையும், நாளை மறுநாளும் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இயல்பை விட வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம். எனவே, பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும். அதிகளவில் நீர், மோர், இளநீர் போன்றவற்றை குடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News April 24, 2025
பண்ட் முகத்தை பார்த்தாலே தெரிகிறது: கும்ப்ளே

பண்ட் விரக்தியில் இருந்தது தெளிவாக தெரிந்ததாக அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். DC-க்கு எதிரான நேற்றைய போட்டியில் பண்ட் 7-வது வீரராக களமிறங்கியது, அவரது முடிவா அல்லது கோச்சின் முடிவா என கேள்வி எழுப்பிய கும்ப்ளே, அது மிகப்பெரிய தவறு எனவும் கூறியுள்ளார். நேற்று 12-வது ஓவரில் LSG 99/2 என இருந்த நிலையில் களமிறங்காமல் 7-வதாக பண்ட் களமிறங்கினார். ஆனாலும் அந்த அணியால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை.
News April 24, 2025
பிளவுப்படுத்தும் அரசியலே காரணம்: ராபர்ட் வதேரா தாக்கு

பஹல்காம் தாக்குதலில் இந்துக்களை மட்டும் கொன்றது ஏன் என பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா வினவியுள்ளார். நம் நாட்டில் தற்போது இந்துத்துவா பேசப்படுவதால், இந்து- முஸ்லிம் இடையே கடுமையான பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், இதுவே இந்துக்கள் குறி வைக்கப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் அவர் சந்தேகத்தை எழுப்பியுள்ளார். ஆனால், தாக்குதலை கண்டிக்காமல் இந்தியா மீது காங். பழிபோடுவதாக பாஜக விமர்சித்துள்ளது.
News April 24, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் 24- சித்திரை- 11 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: துவாதசி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶ பிறை: தேய்பிறை