News August 17, 2025

அன்புமணியின் நியமனங்கள் செல்லாது: ராமதாஸ்

image

அன்புமணி மேலும் ஓராண்டுக்கு பாமக தலைவராக செயல்படுவார் என்று தீர்மானம் நிறைவேற்றியது செல்லாது என, ராமதாஸ் தலைமையிலான சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அன்புமணியால் நியமிக்கப்பட்ட பதவி நியமனம், அறிவிப்புகள் செல்லாது என்றும், ராமதாஸால் நியமிக்கப்பட்டவர்கள் அப்படியே தொடர்வர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 17, 2025

திமுகவுக்கு எதிராக ஒரே நாளில் ஒன்றுகூடிய கட்சிகள்

image

<<18589250>>சென்னையில் பாமக<<>>(சாதிவாரி கணக்கெடுப்பு) மதுரையில் அதிமுக(<<18589622>>மாநகராட்சி முறைகேடு புகார்<<>>) என அரசுக்கு எதிராக அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தின. மேலும், அதிமுக ஆட்சியின்போது வழங்கப்பட்ட லேப்டாப் திட்டத்தில் பயன்பெற்றவர்களுடன் சென்னையில் EPS உரையாடி வருகிறார். 2026 தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இப்போராட்டங்கள் நடத்தப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

News December 17, 2025

வெனிசுலா அரசை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தார் டிரம்ப்

image

வெனிசுலா-அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்து வரும் நிலையில், வெனிசுலா அரசை பயங்கரவாத அமைப்பு என்று டிரம்ப் கூறியுள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. வெனிசுலா எல்லைக்குள் நுழையும், வெளியேறும் அனைத்து தடை செய்யப்பட்ட எண்ணெய் கப்பல்களையும் உடனடியாக முடக்க அவர் உத்தரவிட்டுள்ளார். தென் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வெனிசுலாவை முற்றுகையிட்டுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

News December 17, 2025

திண்டுக்கல் டூ சபரிமலைக்கு ரயில் வழித்தடம்?

image

தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர். இந்நிலையில், தமிழக பக்தர்கள் பயன்பெறும் வகையில், திண்டுக்கலில் இருந்து சபரிமலைக்கு ரயில் தடம் அமைக்க வேண்டும் என்று தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் மக்களவையில் கோரிக்கை விடுத்தார். உடனே மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இக்கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

error: Content is protected !!