News April 28, 2025
பங்குச்சந்தை கிடுகிடுவென உயர்வு

வாரத்தின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் கணிசமான உயர்வை கண்டுள்ளன. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 289 புள்ளிகள் உயர்ந்து, 24,328 புள்ளிகளிலும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,005 புள்ளிகள் உயர்ந்து, 80,218 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. எண்ணெய் நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள் & பொதுத்துறை வங்கிகள் இன்று உயர்வு கண்டுள்ளன. உங்களின் லாபம் அதிகரித்திருக்கிறதா?
Similar News
News August 24, 2025
சற்றுமுன்: விஜய்யுடன் கூட்டணி சேரும் பிரபல கட்சி?

தமிழகத்தில் 70 ஆண்டுகளாக திரை பிம்பத்தை வைத்தே அரசியல் நடக்கிறது, ஆனால் விஜய்யை மட்டும் ஏன் டார்கெட் செய்கிறார்கள் என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். விஜய்யின் ‘ஆட்சியில் பங்கு’ என்பதை வரவேற்பதாக தெரிவித்த அவர், ‘Uncle’ ஒன்றும் கெட்ட வார்த்தை அல்ல என கூறியுள்ளார். தென்மாவட்டங்களில் கணிசமான வாக்குகளைக் கொண்டிருக்கும் புதிய தமிழகம் கட்சி, தவெகவுடன் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
News August 24, 2025
மூலிகை: நன்மைகளை வாரி வழங்கும் தீருநீற்றுபச்சிலை!

➤இதன் 4 இலையை கசக்கி முகர்ந்து பார்த்தால் போதும், தலைவலி நீங்கிவிடும்.
➤வியர்வை நாற்றம் அடிக்காமல் இருக்க, ஒரு கைப்பிடி பச்சிலை இலைகளைப் பறித்து நீரில் நன்கு ஊற வைத்து, அந்த தண்ணீரில் குளித்தால் உடல் நறுமணமாக இருக்கும்.
➤காது வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த இலையின் சாற்றை, சில சொட்டுகள் விட்டால் வலி நீங்கும்.
➤வாயுத்தொல்லை இருப்பவர்கள், இந்த இலையை பச்சையாக மென்று தின்றால் பிரச்னை சரியாகும்.
News August 24, 2025
நியாயம், அநியாயம் என்று எதுவும் இல்லை: ஸ்ருதிஹாசன்

‘ஏன்மா வம்ப விலை கொடுத்து வாங்குற, உனக்கே இது நியாயமா இல்லையா?’ என ‘கூலி’ படம் பார்த்த பலரும் ஸ்ருதிஹாசனிடம் கேட்டுள்ளனர். இதற்கு இன்ஸ்டாகிராமில் கூலாக பதிலளித்துள்ள அவர், ப்ரீத்தி ரோல் துயரத்தில் உள்ளது. எனவே இதில் நியாயம், அநியாயம் என்றும் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். இப்படத்தில் தானாக ஒரு சிக்கலை தேடிச் செல்வது போன்று ஸ்ருதியின் ரோல் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்க என்ன நினைச்சீங்க?