News August 24, 2025
நியாயம், அநியாயம் என்று எதுவும் இல்லை: ஸ்ருதிஹாசன்

‘ஏன்மா வம்ப விலை கொடுத்து வாங்குற, உனக்கே இது நியாயமா இல்லையா?’ என ‘கூலி’ படம் பார்த்த பலரும் ஸ்ருதிஹாசனிடம் கேட்டுள்ளனர். இதற்கு இன்ஸ்டாகிராமில் கூலாக பதிலளித்துள்ள அவர், ப்ரீத்தி ரோல் துயரத்தில் உள்ளது. எனவே இதில் நியாயம், அநியாயம் என்றும் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். இப்படத்தில் தானாக ஒரு சிக்கலை தேடிச் செல்வது போன்று ஸ்ருதியின் ரோல் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்க என்ன நினைச்சீங்க?
Similar News
News January 25, 2026
சென்னை: வீட்டில் பாலியல் தொழில்!

சென்னை வளசரவாக்கத்தில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அந்த பகுதியில் சோதனை செய்த போது, வீடு ஒன்றில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. அங்கு சென்று பாலியல் தொழில் நடத்திய காயத்ரி (31) என்பவரை கைது செய்த போலீசார், 4 பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 25, 2026
பாரத ரத்னா விருது பெற்ற தமிழர்கள் யார் யார்?

நாட்டின் மிக உயரிய விருதாக <<18949906>>பாரத ரத்னா<<>> கருதப்படுகிறது. தத்தமது துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கிய நபர்களுக்கு இந்த உயரிய விருது மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. முதன்முதலில் 1954-ம் ஆண்டு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை, TN-ஐ சேர்ந்த மூவர் பெற்றனர். இந்தியாவில் இதுவரை 49 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அதில் 8 பேர் TN-ஐ சேர்ந்தவர்கள். அவர்கள் யார் என்பதை வலப்பக்கம் Swipe செய்து பார்க்கலாம்.
News January 25, 2026
ஸ்டாலினுக்கு நெருக்கடி… திமுகவில் புதிய சிக்கல்!

தேர்தல் நெருங்குவதால் அமைச்சர்கள் பலரும் தங்கள் ஏரியாவில் பிரபலமானவர்களை திமுகவில் இணைத்து ஸ்டாலினின் குட் புக்கில் இடம்பெற்று வருகின்றனர். இது திமுகவுக்கு சாதகம் என்றாலும், ஒருபுறம் பாதகமாக மாறியுள்ளது. தென்காசி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கு, வரும் தேர்தலில் சீட்டு கொடுக்க தலைமை திட்டமிட்டுள்ளதால் பழைய நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனராம்.


