News August 3, 2024
“ஸ்டாலின் அமெரிக்க பயண ரகசியம்: ஆண்டவரே அறிவார்”

ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்லும் ரகசியத்தை ஆண்டவரே அறிவார் என, ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி, சென்னையிலுள்ள சிலைக்கு இன்று மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, “தொழிற்சாலைகளை ஈர்க்க வெளிநாடு செல்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஸ்டாலின் பயணத்தின் உண்மையான நோக்கமும், மறைமுக ரகசியமும் ஆண்டவருக்கே வெளிச்சம்” என்றார்.
Similar News
News July 11, 2025
‘நிபா’ வைரஸ் பரவல்.. பழங்களை கழுவி சாப்பிடுங்க

கேரளாவில் ‘நிபா’ வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழக மக்கள் பழங்களை நன்றாக கழுவி சாப்பிட வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நிபா வைரஸ், விலங்குகள் வாயிலாக பரவும் தொற்று நோயாகும். குறிப்பாக பழ வகை வெளவால்கள், பன்றி போன்றவற்றிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, தூக்கமின்மை, மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள். SHARE IT.
News July 11, 2025
கடன் வாங்காமல் சமாளிக்க… சிம்பிள் டிப்ஸ்!

அத்தியாவசிய தேவைகளுக்கு கடன் வாங்குவது என்ற காலம் மாறி, ஆடம்பரத்துக்காக தற்போது கடன் வாங்க தொடங்கி விட்டனர். ஆனால், இது பெரும் சிக்கல்களை உருவாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கடன் வாங்காமல் இருக்க, இந்த சிம்பிள் டிப்ஸை பாலோ பண்ணுங்க
✦ஒரு குறிப்பிட்ட தொகை கையிருப்பு வெச்சிக்கோங்க
✦திடீர் செலவுகளை ஈடுகட்ட ஒரு சின்ன சேமிப்பு வேண்டும்
✦பங்குச் சந்தை, தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.
News July 11, 2025
கடன் வாங்கியவர்கள் நெஞ்சில் பாலை வார்த்த FM நிர்மலா

கடனை திருப்பி வசூலிக்கும்போது கஸ்டமர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு FM நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் Non-Banking Financial Company கூட்டத்தில் பேசிய அவர், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தற்போது வழங்கும் கடன்கள் 24% ஆக உள்ளதாகவும், இது 2047-க்குள் 50% ஆக உயர்த்த வேண்டும் என்றார். இதனால் வரும் நாள்களில் பலருக்கும் கடன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.